தெய்வ முத்திரைகள்! - ஆதி முத்திரை

‘‘பிறவிப் பெருங்கடலைக் கடந்து, இறைத்திருவடியாகிய முக்திப் பேற்றை அடைவதே மனிதராகப் பிறப்பெடுத்த ஒவ்வொருவரின் கடமையும் ஆகும். இந்தக் கலியுகத்தில் ஞானப் பயணம் கடின மானதுதான். ஆனால், தெய்வ முத்திரைகளுடன் கூடிய பயணத்தால் ஞானமும், ஆரோக்கியமும் எளிதில் கிடைக்கும் என்பது திண்ணம்’’ என்கிறார், வர்மக்கலை மற்றும் சித்த மருத்துவரான மெய்வழி கல்பனா.

‘‘இந்த நெடுவிரிபுவனம், ஆதியை முதலாகக் கொண்டது. ஒரு புள்ளியிலிருந்து விரிந்து அண்ட சராசரங்களாய் உருவானது. பஞ்சபூதங்களும் ஒவ்வொரு விகிதாசாரத்தில் கலந்து, அண்டமும் பிண்டமுமாகிய நம் உடல்கள் படைக்கப்பட்டன.

உடலுறுப்புகளில் கைகளுக்கு, அதிலும் கை விரல்களுக்கு அதீத முக்கியத்துவம் உண்டு. நம் கையில் நெருப்பு- கட்டை விரலாகவும், காற்று- ஆட்காட்டி விரலாகவும், ஆகாயம்- நடுவிரலாகவும், மண்- மோதிர விரலாகவும், நீர்- சுண்டு விரலாகவும் அமைந்துள்ளன. ஆக, பஞ்ச பூதங்களை அடக்கும் சக்தி நம் கைவிரல்களிலே உள்ளது. இதனால் நமது உடல் மற்றும் உள்ளத்தை ஆரோக்கியத்துடன் வாழ வைக்க, நம் கைவிரல்களே நமக்கு மருத்துவராக மாற முடியும்’’ எனக் கூறும் மெய்வழி கல்பனா, முத்திரைகளின் முக்கியத்துவத்தையும், அவற்றின் பலன்களையும், இந்த இதழ் முதல்  நம்மோடு பகிர்ந்துகொள்கிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்