கல்லும் காணிக்கையாகும்!

தீயனூர் - ஓட்டமட காளியம்மன்

ராமநாதபுரத்திலிருந்து சத்திரக்குடி செல்லும் சாலையில் தீயனூர் கிராமத் தில் கம்பீரமாக காட்சி தந்து அருள்பாலிக்கிறாள் ‘ஓட்டமட காளியம்மன்’. பக்தியோடு பக்தர்கள் சமர்ப்பிக்கும் கல்லையும் காணிக்கையாக ஏற்று அருள்புரியும் கருணை நாயகி இவள்.

நாயக்கர்களால், அவர்களது ஆட்சிக்கு உட்பட்ட சேதுசமுத்திரக் கரைப் பகுதியைப் பாதுகாக்கும் பொருட்டு நியமிக்கப்பட்ட நிர்வாகிகள்தான் சேதுபதிகள். அப்படி, 17-ம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் இந்தப் பகுதியை நிர்வகித்தவர், கிழவன் ரகுநாதசேதுபதி. ஒருநாள், அவர் காளியம்மன் கோயிலுக்கு அருகில் வந்து கொண்டிருந்தபோது, மரத்தடியில் அமர்ந்திருந்த சித்தர் ஒருவர்,‘தனியொரு நாட்டுக்கு நீ அரசனாகும் காலம் கனிந்துவிட்டது’ என்று அருள்வாக்கு கூறிச் சென்றார். அதைக் கேட்டு பிரமித்த சேதுபதி, அம்பாள்தான் சித்தர் வடிவில் வந்து அருள்புரிந்ததாகக் கருதி, அருகில் இருந்த காளி கோயிலுக்குச் சென்று மனம் உருகி வழிபட்டார். சித்தர் வாக்கு விரைவில் பலித்தது.

18-ம் நூற்றாண்டின் துவக்கம், சேதுபதி மன்னர்களின் ஆட்சிக் காலத்தின் திருப்புமுனை மிக்க காலமாகத் திகழ்ந்தது. நாயக்கர்களின் கீழ் சேதுபதிகள் ஆட்சிபுரிந்தாலும்,  சிவகங்கை மற்றும் ராமநாதபுரப் பகுதிகளில் நிகழ்ந்த கட்டாய மதமாற்றம் கண்டு மிகவும் மனவேதனை அடைந்தார் கிழவன் ரகுநாத சேதுபதி. மக்களும் அச்சத்துடனே இருந்தனர். இந்தச் சூழலை அகற்றி, தனித்து நாடாள வேண்டும் என்ற எண்ணம் சேதுபதியின் மனதில் வலுப்பெற்றது. அதன் விளைவாக நாயக்க அரசியான ராணி மங்கம்மாளுடன் போரிட்டு வெற்றி பெற்றார் கிழவன் ரகுநாத சேதுபதி.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்