கடனும் கஷ்டமும் தீர சாம்பல் பூசணி தீபம்!

ருமபுரியில் இருந்து சேலம் செல்லும் வழியில், நல்லம்பள்ளி - அதியமான்கோட்டை உள்ளது. இங்கே, காசியம்பதிக்கு அடுத்தாற் போல், தனிக்கோயிலில் இருந்தபடி அனைவருக்கும் அருளும் பொருளும் அள்ளித் தருகிறார் ஸ்ரீகாலபைரவர். இங்கே, உன்மத்த பைரவராகக் காட்சி தரும் அழகே அழகு!

அதியமான் காலத்தில் கட்டப்பட்ட இந்தக் கோயிலின் விதானத்தில், 12 ராசிகள் மற்றும் 27 நட்சத்திரங்களுக்கான நவகிரகச் சக்கரங்கள் உள்ளன என்பது சிறப்பு. மேலும் இந்த பைரவரின் திருமேனியிலும் 12 ராசிகளும் 27 நட்சத்திரங்களும் அடங்கியிருப்பதாக ஐதீகம். எனவே, 27 நட்சத்திரக் காரர்களும் இவரை வணங்கி வழிபட்டால், நவகிரக தோஷங்கள் யாவும் விலகும் என்பது ஐதீகம்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்