தமிழகத்தின் புண்ணிய தீர்த்தங்கள்

மு.ராகினி ஆத்ம வெண்டி

புண்ணிய தீர்த்தங்களில் நீராடி இறைவனை வழிபடுவதால் தாங்கள் புனிதம் அடைவதாக பக்தர்கள் நம்புகின்றனர். புண்ணிய தீர்த்தங்களில் நீராடுவதன் அவசியத்தை வேதங்களும் புராணங்களும் வலியுறுத்துகின்றன. இத்தகைய புண்ணிய தீர்த்தங்களுக்கு நம் நாட்டில் பஞ்சமே இல்லை. தமிழகத்தில் பல முக்கியமான புண்ணியதீர்த்தங்கள் உள்ளன. அவற்றுள் ராமேஸ்வரத்தில் உள்ள அக்னி தீர்த்தம், கும்பகோணத்தில் உள்ள மகாமக தீர்த்தம் போன்ற தீர்த்தங்கள் நமக்குத் தெரிந்தவைதான். அதேபோல் முக்கியத்துவம் வாய்ந்த வேறு சில தீர்த்தங்களையும் அவற்றின் மகிமையையும் காண்போம்.

சர்வதீர்த்தம் - காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலுக்கு அருகில் காஞ்சி புரம் - வேலூர் சாலையில் அமைந்துள்ளது சர்வதீர்த்தம். சகல தோஷங்களையும் நீக்கி, முக்தியைத் தரும் சக்தி கொண்டது சர்வதீர்த்தம்.
அம்பிகை மணலால் சிவலிங்க பிரதிஷ்டை செய்து வழிபட்டபோது, அம்பிகையின் மன உறுதியை சோதிக்க நினைத்த சிவபெருமான், அனைத்து நதிகளையும் காஞ்சியில் வெள்ளமாகப் பெருக்கெடுக்கச் செய்தார். வெள்ளப் பெருக்கைக் கண்டு அச்சம் கொண்ட அம்பிகை, பெருமானின் லிங்கத் திருமேனியைக் காக்கும் பொருட்டு, ஆரத் தழுவிக் கொண்டார்.  சிவன் அருளைப் பரிபூரணமாகப் பெற்றாள். எனினும் நதிகள் வருந்தின. அன்னையின் சிவ பக்தியை சோதிக்கும் பொருட்டு சிவனாரின் ஆணைக்கு இணங்கவே, நதிகள் பெருக்கெடுத்து வந்தன. எனினும் தங்களுடைய அந்தச் செயல் உகந்தது அல்ல எனக்கருதி விமோசனம் பெற முற்பட்டன. அதனால் அத்திருத்தலத்திலேயே சர்வ தீர்த்தங்களும் இறைவனைச் சரணடைந்து, இறைவனை தீர்த்தேஸ்வரராக வழிபட்டன. அவற்றின் வழிபாட்டில் மகிழ்ந்த ஈசன், ‘‘நீங்கள் எல்லோரும் இங்கேயே சர்வதீர்த்தம் என்ற பெயருடன் திகழ்வீர்கள். உங்களில் நீராடி தர்ப்பணம், தானம் செய்பவர்கள் சகல பாவங்களும் நீங்கி, அனைத்து நன்மைகளும் பெற்று, நிறைவில் முக்தியும் பெறுவர்’’ என்று அருள்புரிந்தார்.

நாழிக்கிணறு - திருச்செந்தூர்

அழகன் முருகனின் அருளாட்சி நடக்கும் திருச்செந்தூரில் கோயிலுக்கு அருகில் அமைந்திருக்கும் தீர்த்தம்தான் நாழிக்கிணறு.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்