இஷ்ட தெய்வ வழிபாடு!

‘இஷ்டம் இருந்தாலும் இஷ்டம் இல்லாவிட்டாலும் ஏதோ ஒரு மகா சக்தியிடம் பக்தி செய்வது என்று ஒரு தத்துவத்தை மட்டும் காட்டாமல், நம் மனசுக்கு எப்படி இஷ்டமோ, அதற்கு அனுசரணையாகவே அந்த மகாசக்தியை ஒரு மூர்த்தியில் பாவித்து, வெறும் தத்துவத்தை ஜீவனுள்ள ஓர் அன்பு உருவகமாக பாவித்து, பக்தி செய்வதற்கு நம் மதம் அருளியுள்ள வழிபாடே இஷ்ட தெய்வ வழிபாடு’ என்று தெய்வத்தின் குரலாக மொழிந்திருக்கிறார் காஞ்சி பெரியவர்.

தெய்வ வழிபாடுகளில் குலதெய்வ வழிபாடு, இஷ்ட தெய்வ வழிபாடு என இரண்டு வழிபாட்டு முறைகள் உண்டு. குல தெய்வ வழிபாடு என்பது குடும்பத்தில் வழிவழியாகச் செய்யப்படும் வழிபாடு ஆகும். இஷ்ட தெய்வ வழிபாடு என்பது அவரவர் தங்கள் மனதுக்குப் பிடித்தமான தெய்வத்தை வழிபடுவது.

விநாயகர் சிலருக்கு இஷ்ட தெய்வம் என்றால், சிலருக்கு முருகன் இஷ்ட தெய்வமாக இருக்கலாம். சிலர் அம்பிகையை இஷ்ட தெய்வமாக வழிபடுவார்கள்; இன்னும் சிலர் சிவபெருமானை இஷ்ட தெய்வமாக வழிபடுவார்கள். இப்படியே ஒவ்வொருவரும் அவரவர் விருப்பப்படி சிவன், கிருஷ்ணன், ஆஞ்சநேயர் என்று ஒவ்வொரு தெய்வத்தை வழிபடுவார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்