முன்னோர்கள் சொன்னார்கள்

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
ஜோதிட சிந்தனைகள் 2-ம் பாகம்சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

க்னத்தில் இருந்து ஏழாம் வீடு, ஆண் ஜாதகத்துக்கு வரப் போகும் மனைவியின் தரத்தையும், பெண் ஜாதகத்துக்கு வரப் போகும் கணவனின் தரத்தையும் சுட்டிக்காட்டும். நாலாம் வீடு அவனது மகிழ்ச்சியை சுட்டிக் காட்டும். அத்துடன்  நிற்காமல் லக்னத்தில் இருந்து நாலாம் வீட்டின் 4 மற்றும் 7... அதாவது, நான்கின் நான்கான ‘7’ அந்த மகிழ்ச்சியின் நிறைவை வரையறுக்கும். (இதில், நான்கின் நான்கு என்றதும் 8 என்று எண்ணக் கூடாது. 4-யும் சேர்த்து எண்ணும்போது 4, 5, 6, 7 என்று எண்ணிக்கை 7-ல் முடிந்து விடும்).

அதேபோல் நான்கின் ஏழான ‘10’-ம் வீடு, அவனது வாழ்வுக்கு ஆதாரமான வேளை (கர்மம்), வேலையின் தரத்தை வரையறுக்கும்.  பத்தின் பத்து... அதாவது 7-ம் வீடு அவனது வேலையில் ஈட்டிய ஆதாயத்தின் அளவை நிறைவு செய்யும். இதிலும் முன்பு சொன்னது போலவே 10-ம் வீட்டை ஒன்று என்று வைத்து எண்ணினால் 7-ம் வீட்டோடு எண்ணிக்கை முடிந்துவிடும். இதை ஜோதிடத்தில் ‘பாவத் பாவம்’ என்று சொல்வார்கள்.

நாம் விரும்பும் பாவத்தை லக்னமாக வைத்துப் பார்க்கவேண்டும். ஒருவனது வேலையை (கர்மத்தை) எடைபோட அவனது லக்னத்திலிருந்து 10-ம் வீட்டை ஆராய வேண்டும். அதன்பிறகு,
10-ம் வீட்டின் பத்தாம் வீட்டையும் (7-ம் வீடு) இணைத்துக் கொள்ளவேண்டும். அப்போதுதான் அதன் ஆராய்ச்சி நிறைவை எட்டும். ஒருவனது ஆயுளை நிர்ணயிக்க 8-ம் வீட்டை ஆராய வேண்டும். ‘பாவாத்பாவம்’ என்கிற நோக்கில் எட்டின் எட்டையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். எட்டின் எட்டு என்பது லக்னத்தில் இருந்து 3-வது வீடு. நெருடல் இல்லாமல் ஆயுளை வரையறுக்க, அதன் எட்டான மூன்றாம் வீட்டையும் ஆய்வில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்