ராம ராம பாஹிமாம்!

சுபா கண்ணன்

கடவுளே ஆனாலும்...

‘கௌசல்யா சுப்ரஜா ராமபூர்வா...’ ராமனைத் துயில் எழுப்ப, விஸ்வாமித்திர மகரிஷியால் அருளப்பெற்ற இந்தப் பாடல் உலகப் பிரசித்தம்.

அரண்மனையில் பஞ்சணையில் தூங்கிப் பழகிய ராம- லட்சுமணர், காட்டில் கல்லிலும் முள்ளிலும் நடந்த அசதி மேலிட கட்டாந்தரையில் துயில்கொண்டனர்.

அரண்மனையில் துயில்கொள்ளும் வேளையில், விடிந்ததும் லாலித்யர்கள் இனிமையாகப் பாடி துயிலெழச் செய்வார்கள்.  லாலி என்றால், தூங்கும்போது பாடும் தாலாட்டு.  இதைப் பாடுபவர்கள் லாலித்யர்கள். லாலித்யர்களின் வேலை தூங்கச் செய்வது. அதேபோல், அமைதியாக துயிலெழுப்புவதும் அவர்களது பணியே!

இங்கே, கௌசிக மஹாராஜன் அதாவது விஸ்வாமித்திரர், எத்தகையதொரு பேரன்புடன் லாலித்யம் செய்கிறார் பாருங்கள். ‘கர்த்தவ்யம் தெய்வமாந்ஹிகம்’ - ‘கடவுளே ஆனாலும் நேரத்தோடு எழு; கர்த்தவ்யமே முக்கியம்’ அதாவது, கர்மமே முக்கியம் என்கிறார்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்