மனசெல்லாம் மந்திரம் - 7

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
சத்ரு பயம் அகற்றும் மஹா பிரத்யங்கிரா தேவிவித்யாவாரிதி சுப்ரமண்ய சாஸ்திரிகள்

‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ என்பார்கள். அதே போல் எதிரிகள் இல்லாத வாழ்க்கைதான் நிம்மதியான வாழ்க்கை என்றும் சொல்லலாம். ஆனால், இந்தக் கலிகாலத்தில் ஒவ்வொருவருக்கும் ஏதேனும் ஒரு வகையில் எதிரிகளின் தொல்லை இருக்கத்தான் செய்கிறது. எதிரிகளின் தொல்லை என்பது நேருக்கு நேர் நின்று நமக்குத் தீங்கு விளைவிப்பது மட்டுமே இல்லை; நாம் கஷ்டப்படவேண்டும், நாம் வாழ்க்கையில் முன்னேறக்கூடாது என்றெல்லாம் நமக்கு வேண்டாதவர்கள் நினைப்பதும்கூட ஒருவகையில் நம்மை கஷ்டப்படுத்தவே செய்யும் என்பதால், அதுவும்கூட ஒருவகையில் மறைமுகமான எதிரிகளின் தொல்லை என்றுதான் சொல்லவேண்டும்.

இப்படி எதிரிகளால் ஏற்படக்கூடிய சகலவிதமான தொல்லைகளில் இருந்தும் நம்மைக் காப்பாற்றுபவள் ஸ்ரீமஹா பிரத்யங்கிராதேவி.

வைகுண்டத்தில் துவாரபாலகர்களாக இருந்த ஜய, விஜயர்கள் சனகாதி முனிவர்களின் சாபத்தால் பூமியில் பிறக்கும்படியாக சபிக்கப்பட்டனர். ஜய, விஜயர்கள் பகவானிடம் முறையிட்டனர். ஆனால், பகவான், ‘‘முனிவர்களின் சாபத்தை மாற்ற யாராலும் முடியாது. நீங்கள் பூமியில் நல்லவர்களாக நூறு பிறவிகள் எடுத்த பிறகு என்னை அடையலாம். அல்லது, என்னை வெறுப்பவர்களாக மூன்று பிறவிகள் எடுத்து, என்னால் சம்ஹாரம் செய்யப்பட்டு என்னை அடையலாம். நீங்கள் எப்படி விரும்புகிறீர்களோ அப்படி உங்களுக்கு நான் வரம் தருகிறேன்’’ என்றார். ஜய, விஜயர்கள் நூறு பிறவிகள் தங்களால் பகவானைப் பிரிந்து இருக்கமுடியாது என்பதால், கொடியவர்களாக மூன்று பிறவிகள் மட்டுமே எடுத்து, பகவானால் சம்ஹாரம் செய்யப்பட்டு விரைவில் பகவானிடம் வந்துவிடவேண்டும் என்று வரம் பெற்றனர். அப்படி ஜய, விஜயர்கள் முதலில் எடுத்த பிறவிதான் இரண்யாக்ஷன்; இரண்யகசிபு.

இரண்யாக்ஷனை பகவான் வராக அவதாரம் எடுத்து சம்ஹாரம் செய்தார். இரண்யகசிபுவை பகவான் நரசிம்ம அவதாரம் எடுத்து, சம்ஹாரம் செய்து அவனுடைய ரத்தத்தைப் பருகினார். அசுரனின் ரத்தத்தைப் பருகிய காரணத்தால், பகவான் உக்கிரம் கொண்டுவிட்டார். அவருடைய உக்கிரம் தாங்கமாட்டாமல் அஞ்சிய தேவர்கள், சிவபெருமானிடம் சென்று பிரார்த்தித்தனர். சிவபெருமான் தம்முடைய அம்சமாக சரபரைத் தோற்று வித்தார். சரபர் நரசிம்மரின் உக்கிரத்தைத் தணிவிக்க அவருடன் போரிட்டும் அவருடைய உக்கிரத்தைத் தணிவிக்க முடியவில்லை. அப்போது சரபரின் இறக்கைகளில் இருந்து சூலினி, பிரத்யங்கிரா தேவியர் தோன்றி நரசிம்மரின் உக்கிரத்தை அடக்கியதாக புராண வரலாறு.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்