உதவலாம் வாருங்கள்

வாசகர்களே!

கேள்விகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை. அதிலும் ஆன்மிகத்தில் தேடலும் அது சார்ந்த சந்தேகங்களும் வினாக்களும் மிக அதிகம். அந்த வகையில் ஆலயங்கள், சமய இலக்கியங்கள், சாஸ்திரங்கள் மற்றும் புராண நூல்கள் குறித்த தகவல்கள் தொடர்பாக, உங்களுக்குள் எழும் சந்தேகங்களை-கேள்விகளை ‘உதவலாம் வாருங்கள்’ பகுதிக்கு எழுதி அனுப்புங்கள். தகுதியானவை சக்தி விகடனில் பிரசுரமாகும். இந்தப் பகுதியின் சிறப்பு... வாசகர்களின் வினாக்களுக்கு வாசகர்களே பதில் பெறப்போகிறார்கள் என்பதுதான். ஆமாம்! குறிப்பிட்ட வாசகர்கள் பெற விரும்பும் தகவல்களை... அதுபற்றி துல்லியமாகத் தெரிந்திருக்கும் வாசகர்கள், இந்தப் பகுதியில் பகிர்ந்து கொள்ளலாம். சந்தேகமோ விளக்கமோ எதுவாயினும் அவற்றை ‘உதவலாம் வாருங்கள்!’ என்று குறிப்பிட்டு சக்தி விகடனுக்கு அனுப்பவும். உங்களது தெளிவான முகவரி, இ.மெயில் முகவரி மற்றும் தொலைபேசி எண்களையும் குறிப்பிடுவது மிக அவசியம். அத்துடன், சக்தி விகடனின் ‘உதவலாம் வாருங்கள்’ முகநூல் பக்கத்திலும் தங்களது சந்தேகங்களை பகிரலாம்.

னது தகப்பனார்  கார்த்திகை மாதம் ஜோதி தீபத்தின்போது கீழ்க்காணும் பாடல்களைப் பாடுவார். எனக்கு அவற்றில் சில பாடல்களின் முதல் வரி மட்டுமே தெரியும். அவற்றை முழுமை யாக அறிந்தவர்கள் எவரேனும் இருந்தால், பகிர்ந்துகொள்ளுங்களேன்.

பாடல்களின் முதல் வரிகள்...

‘மூசிக வாகன மேறும் மூத்தோன் வாழி
முப்பத்து முக்கோடி தேவர் வாழி...’
‘மச்சரிசி கூர்மர் ஆதன் வேதன்
மாலுடனே பிரம்மாவும் மண்ணும் விண்ணும்...’


இந்தப் பாடல்கள் அடங்கிய புத்தகத்தின் பிரதி இருந்தால் தந்து உதவுங்களேன்.

- க.தண்டபாணி, பொள்ளாச்சி

தீராத கடன் தொல்லைகள் தீர செய்ய வேண்டிய வழிபாடுகள், படிக்கவேண்டிய ஸ்லோகங்கள் பற்றிய தகவல்களைத் தந்து உதவுங்கள்.

- கிருஷ்ணவேணி நடேசன், ஸ்ரீரங்கம்

னக்குத் தமிழ் உரையுடன் கூடிய சியாமா சாஸ்திரிகளின் கீர்த்தனை புத்தகம் தேவைப்படுகிறது. இந்த புத்தகம் எங்கு கிடைக்கும் அல்லது எவரிடமேனும் இந்த புத்தகம் இருந்தால், அதனைப் பிரதி எடுத்து அனுப்பி உதவுங்கள்.

- மீ.சீனிவாசன், பரமக்குடி-7

திருமணம் விரைவில் நடைபெறுவதற்கு வழிபட வசதியாக, ஸ்ரீசுயம்வர பார்வதி படம் மற்றும் ஸ்லோகமும், இதர ஆன்மிகத் தகவல்களையும் அன்பர் ஒருவர் தபால் மூலம் இலவசமாக அனுப்பிவருவதாக அறிந்தேன். இப்படி சேவை செய்துவரும் அந்த அன்பரின் முகவரி அறிந்தவர்கள், அதுபற்றி விவரம் கூறினால் பயனுள்ளதாக இருக்கும்.

- ஏழுமலை, ரய்சூர்

னக்கு யஜுர்வேத த்ரிகால சந்தியாவந்தனம் மற்றும் அமாவாசை தர்ப்பணம் குறித்த விவரங்கள் அடங்கிய புத்தகம் தேவைப்படுகிறது. ஆக்கூர் அனங்காசார்யர் அவர்களால் எழுதப்பட்ட இந்தப் புத்தகம் எங்கே கிடைக்கும் என்பதை விவரம் தெரிந்த வாசகர்கள் தெரிவித்தால் பயன் உள்ளதாக இருக்கும்.

- என்.ஜெயராமன், ஸ்ரீரங்கம்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்