பொன்மழை பொழிக!

திருப்புகழ்த் திலகம் மதிவண்ணன்

ழை தம்பதிக்கு திருமகள் அருள் செய்யும்படி ஆதிசங்கரர் பாடியருளியது கனகதாரா ஸ்தோத்ரம். அவர் அதைப் பாடியதும் பொன் மாரிப் பொழிந்தாள் அலைமகள்.

அற்புதமான அந்தப் பாடலின் கருத்துகள் மிளிர, தமிழில் பாடி அலைமகளைத் துதிப்பது, இன்னும் மகிழ்ச்சி அல்லவா? இதோ, 'பொன்மழைப் பொழிக' எனும் பாடல் உங்களுக்காக. வரலட்சுமி விரத நாளில் இப்பாடலைப் பாடி, திருமகளை வழிபட்டு வரம் பெறுவோம்.

தங்கநிற வண்டுமொய்க்கும் முகுளமலர் போலே
மங்கலமாம் திருமகள்நீ மார்பில்உள்ள தாலே
பொங்குகின்ற மகிழ்ச்சியினால் பொலிகின்றார் மாலே
பங்கயமே! அப்பார்வை படவேண்டும் மேலே!

நீலமலர் மேலமரும் தும்பிகளைப் போன்றே
நின்விழிகள் மாதவன்மேல்! நிலவுவதும் சான்றே!
காலமெலாம் பூத்திருக்கும் கண்மலரால் கண்டு
கருணைதந்தால் கடையனுக்கும் வெற்றி இங்கே உண்டு!

தேவருல காளுகின்ற தேவேந்தரப் பதவி
திருமகளே ஒரு நொடிஉன் விழிசெய்யும் உதவி!
மேவுகின்ற கருமணியின் நிழல்பட்டால் போதும்!
மேதினியின் வளமனைத்தும் என்னிடத்தில் மோதும்!

கணவனிடம் பதிந்திருக்கும் கண்மணியைக் கொஞ்சம்
காட்டுகநீ! அடியனிடம் கனகங்கள் கொஞ்சும்!
அனைவருக்கும் சகலசெல்வ அநுபோகம் தருவாய்!
அலைவீசும் பாற்கடலின் அமுதுடனே வருவாய்!

கார்வண்ணன் மேனிதவழ் கெளஸ்துபமே போல
கண்மணிகள் கொண்டவளே! முகுந்தனவன் நீல
மார்பினிலே திகழ்பவளே! மங்கலமே பெருக
மனைவிளங்க வயல்செழிக்க மழைவளமே தருக!

மதுகைட பரை அழித்த மன்னவனின் மேனி
மதுகையுடன் தழுவுகின்ற தேவிஇங்கு வாநீ!
பதுமத்தில் உறைபவளே! பிருகுவம்சச் சேயே!
படவேண்டும் பார்வைமலர்! என்மீது தாயே!

மன்மதனும் உன்னழகைப் பாணமெனக் கொண்டே
மாலவனை வெற்றிகொண்ட கதையுமிங்கு உண்டே!
உன்மோகப் பார்வைக்கே இணை எதுதான் சொல்ல!
உன் செல்வப் படைவேண்டும் இவ்வுலகை வெல்ல!

நீருண்ட மேகமென நிலவுகின்ற நயனம்
நிலைபெற்றால் சுகம்பெறுமே என்வாழ்வுப் பயணம்!
நாரணரின் உயிரமுத நாயகியே வாழ்க!
நாடுகின்ற பக்தன் எனை நலமனைத்தும் சூழ்க!

முக்தியினை எட்டும்என்றன் முயற்சிஎன்ன எளிதா?
முதல்விஉன்றன் அருளிருக்க விதியும்என்ன வலிதா?
சக்தியே! உன் சந்நிதியில் சரணம் சொல்லு கின்றேன்!
தாயே! உன் கருணையினால் மரணம் வெல்லு கின்றேன்!

காப்பதுவும், அழிப்பதுவும், படைப்பதுவும் நீயே!
கலைமகளே! அலைமகளே! மலைமகளே! தாயே!
வாய்ப்புற்றேன் திருமகளே வாக்கெடுத்துப் போற்ற!
வரந்தருவாய்! அடியவனின் ஊழ்வினையை மாற்ற

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்