திருவிளக்கு பூஜை... - திருப்பட்டூர் திருவிழா!

‘‘நான் சக்தி விகடன் நடத்துற விளக்கு பூஜைகள்ல என்னால முடிஞ்சவரைக்கும் கலந்துக்கிட்டி ருக்கேன். என்னுடைய வேண்டுதலும் நிறைவேறி இருக்கு. ஆனா, இந்த திருப்பட்டுர்ல நடந்த மாதிரி வேற எங்கேயும் திருவிழாபோல விளக்கு பூஜை நடந்து நான் பார்க்கவே இல்லை. இந்த ஊர் மக்கள்கிட்ட இருக்கற ஈடுபாடு என்னை சிலிர்க்க வச்சிடுச்சு’’ என்று தஞ்சாவூரில் இருந்து வந்த வாசகி பெரியநாயகி நம்மிடம் நெகிழ்ச்சியுடன் கூறினார்.

அவர் சொன்னது கொஞ்சமும் மிகையில்லை. சக்தி விகடனும் தீபம் விளக்கேற்றும் எண்ணெய் நிறுவனமும் இணைந்து 12.7.16 அன்று திருப்பட்டூர் மகா மாரியம்மன் கோயிலில் நடத்திய திருவிளக்கு பூஜை ஒரு திருவிழாபோல் நடந்தேறியது. பூஜைக்கான ஏற்பாடுகளை, மகா மாரியம்மன் கோயில் நிர்வாகத்தினருடன் ஊர்மக்களும் ஒன்று சேர்ந்து செய்திருந்தார்கள். அன்று காலையிலேயே அங்குள்ள கிராம மக்கள் கோயிலுக்கு வந்து, ஏதோ தங்கள் வீட்டு வைபவம் போன்று விளக்கு பூஜைக்கான பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டதைப் பார்த்து சிலிர்த்துப்போனோம். விளக்கு பூஜையில் கலந்துகொண்டவர்கள்தான் என்றில்லை, மற்றவர்களும்கூட பூஜைக்கான ஏற்பாடுகளில் தங்களை ஆத்மார்த்தமாக ஈடுபடுத்திக் கொண்டனர்.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்