மனசெல்லாம் மந்திரம் - 8

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
உங்கள் இல்லத்தில் செல்வம் கொழிக்க... லக்ஷ்மி குபேர மந்திரம்வித்யாவாரிதி சுப்ரமண்ய சாஸ்திரிகள்

எல்லோரும் எப்போதும் சுகமாக சகல வசதிகளுடன் வாழவே விரும்பு வார்கள். அதுதான் மனித இயல்பு. ஒருவர் சுகமாக வாழவேண்டுமானால், அவருக்கு ஐஸ்வர்யம் தேவை. ஐஸ்வர்யம் என்பது இங்கே குறிப்பாக செல்வத்தையே - பணத்தையே குறிப்பிடும். பணம் சம்பாதிப்பதற்கு பலவித வழிகள் இருந்தாலும், ஒருவர் பெரும் திரளான செல்வத்துக்கு அதிபதியாக இருக்கவேண்டுமானால், அவருக்கு கடவுளின் கிருபை வேண்டும். ஒருவரின் செல்வ நிலையை நிர்ணயிப்பதில் ஜோதிட சாஸ்திரத்தில் 2-ம் இடத்துக்கு அதிபதி, 2-ம் இடத்தின் அமைப்பு, தன ஸ்தானமான 2-ம் பாவத்துக்கும் லாப ஸ்தானமான 11-ம் பாவத்துக்கும் உள்ள தொடர்பு என்றெல்லாம் பல காரணங்கள் சொல்லப்பட்டு இருக்கின்றன.

தனேசோ லாப பாவஸ்தே லாபேசோ தனதேபவேத்
அஷ்ட ஐஸ்வர்யம் அவாப்னோதி குபேரயிவ பூதலே


அதாவது 2-ம் பாவ அதிபதி 11-ம் இடத்திலோ அல்லது 11-ம் பாவ அதிபதி 2-ம் இடத்திலோ அமையப் பெற்றால், அவர் எல்லா ஐஸ்வர்யங்களும் உடைய குபேரதேவனைப் போல் விளங்குவார் என்று பிருஹத் பராசர ஹோரா சாஸ்திரம் கூறுகின்றது. மேலும் 2-ம் பாவ அதிபதியும் 11-ம் பாவ அதிபதியும் ஒன்றாக இருப்பதோ அல்லது பார்வை பெற்றிருப்பதோ அல்லது பரிவர்த்தனை பெற்றிருப்பதோ சிறப்பான தனயோகம் தரும். மேலும் பிருஹத் பராசர ஹோரா சாஸ்திரம் 11 வகையான தனயோகங்களை வரையறுக்கிறது. பாவார்த்த ரத்னாகரம், சங்கீதநிதி போன்ற நூல்களிலும் பலவிதமான தனயோகங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. இப்படியெல்லாம் ஒருவருக்கு யோகங்கள் இருந்தாலும்கூட, அவருடைய ஜாதகத்தில் ஹேமத்துரும யோகம் என்று ஒரு அவயோகம் இருந்தால், அவருக்கு இந்த தன யோகம் எதுவும் பலன் தராது. ஒருவருக்கு நிறைவான செல்வம் கிடைப்பது, குருபகவானின் அமைப்பைப் பொறுத்தே உண்டாகிறது.

இந்த யோகங்கள் எல்லாமே பூர்வபுண்ணியத்தைப் பொறுத்தே ஒருவருக்கு அமைகிறது. எப்படி நம்முடைய பெற்றோரையும் நாம் பிறக்கும் நேரத்தையும் நம்மால் நிர்ணயிக்கமுடியாதோ, அதேபோல் நம்முடைய கர்மவினைகளால் வரக்கூடிய பலன்களைக்கூட நம்மால் மாற்றமுடியாது. இருப்பினும் இந்தக் கலிகாலத்தில் நம்முடைய கர்மவினைகளை நீக்கி, சகல நன்மைகளையும் பெறுவதற்காகவே நம்முடைய மஹரிஷிகள் பல வகையான மந்திரங்களை தங்களு டைய ஞானதிருஷ்டியால் கண்டறிந்து நமக்கு அருளி உள்ளனர். இதையே பாகவதமும் வலியுறுத்துகிறது.

ஒருவர் சுகமாக வாழ்வதற்கு நிறைய செல்வம் பெற்றிடவும், அப்படி பெற்ற செல்வம் நிலைத்திடவும் அருள்செய்யும் மந்திரங் களை, நம்முடைய மஹரிஷிகள் அருளிச் சென்றுள்ளார்கள். அத்தகைய மந்திரங்களுள் ஒன்றுதான் லக்ஷ்மிகுபேர மந்திரம்.

இந்த மந்திரத்தின் ரிஷி: விஸ்ரவர்; சந்தஸ்: ப்ருஹதி: தேவதை: சிவமித்ர தனேச்வரர்.

இந்த மந்திரத்தை தகுந்த குருவின் மூலமோ அல்லது வேதம் கற்ற சாஸ்திரிகளைக் கொண்டோ முறைப்படி உபதேசம் பெற்று, அங்கநியாச, கரநியாச பூர்வாங்க பூஜைகளை கிரமத்துடன் செய்து, பின்னர் ஒரு சிவாலயத்திலோ அல்லது வில்வ விருட்சத்தின் கீழோ அமர்ந்துகொண்டு 1 லட்சம் தடவை ஜபிக்கவேண்டும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்