மனிதனும் தெய்வமாகலாம்! - 45

பி.என்.பரசுராமன், ஓவியம்: வந்தியன்

ஆா்வமுள்ள சீடன் ஆத்மார்த்தமாகக் கேட்கிறான்.

அவனுக்குக் குருவும் பதில்சொல்லிக்கொண்டு வருகிறார்.

 சீடன்,"குருதேவா! பிரம்மா முதல் தவம் வரை அனைத்தும் மாயை என்று சொன்னீா்கள். அப்படிச் சொல்வது தவறில்லையா?" எனக் கேட்கிறான்.

 குரு தொடா்ந்தார். கனவில் எவ்வளவோ பார்க்கிறோம். அவையெல்லாம் விழித்தெழுந்ததும் எங்கே? மறைந்துபோய்விடுகின்றன அல்லவா? அது மட்டுமல்ல. பலநேரங்களில், என்ன கனவு கண்டோம் என்பதே நினை வுக்கு வராது.

 அப்படியென்றால் கனவு கண்டது உண்மையா? பொய்யா? கனவில் கண்டது எல்லாம் பொய் தானே! அவற்றையெல்லாம் உண்மையென்று எப்படிச் சொல்வது?
அதுபோல...

 பிரம்மத்தின் மீது ஏற்றப்பட்ட, படைக்கும் கடவுளான பிரம்மா முதல் தவம் வரை அனைத்துமே மாயை தான் - எனக் குரு சொல்ல, உடனே சீடன் கேட்கிறான்.

                மாயை என்பது ஏது? உடையா் ஆா்?
                            எப்படி வந்தது? வருவானேன்?
                மாயை என்பது பிரமத்தின் வேறு
                             எனின் வத்துவும் இரண்டாமே
                மாயை என்பதும் பிரமமும் ஒன்று
                              எனின் வத்துவும் பொய்யாமே
                மாயை என்ற மேகங்களுக்கு ஒரு
                              சண்டமாருத குருமூா்த்தி

                                              (சந்தேகம் தெளிதல் படலம் - 94)

 
 சீடனின் கேள்வியாக அமைந்த இப்பாடலில், மாயையைப் பற்றி ஆறு கேள்விகள் இடம்பெறுகின்றன. மேலும் சீடன் கேட்கும்போதே,"மாயை என்ற மேகங்களுக்கு, சண்ட மாருதம் எனும் பெருங்காற்றாகிய குருமூா்த்தியே!"எனத் தொடங்கிக் கேட்கிறான். அதாவது...

மாயை என்பதை நீக்கக்கூடியவா் குருநாதா் எனத் தெளிவாகப் புரிந்து கொண்டிருக்கிறான். சீடன். அதனால் தான் ஆசாபுருஷரிடம் ஆறு விதமான கேள்விகளைக் கேட்கிறான். கேள்விகள் ஆறு என அமைந்திருந்தாலும், அனைத்துமே மாயையை அடிப்படையாகக் கொண்டவை.

 1.முதற்கேள்வி - மாயை என்றால் என்ன?

 2.மாயையை உடையவா்கள் யார்?

 3.மாயை எவ்விதம் உதயமானது?

 4.மாயை ஏன் உண்டானது?

 5.மாயை வேறு,பிரம்மம் வேறு என்றால், பிரம்மத்தைத் தவிர மற்றொன்று இருப்பதாக ஆகுமே!  பிறகு எப்படி பிரம்மம் மட்டுமே உள்ளதாகச் சொல்ல முடியும்?

 6. மாயையும் பிரம்மமும் ஒன்று என்றால்,பிரம்மமே மாயை தானே? மிகமிகக் கடினமான கேள்விகள் இவை. பதில் சொல்ல முடியாததாக நமக்குத் தோன்றினாலும், குரு பதில் சொல்கிறார்.

ஆனால் தொடக்கமும் முடிவும் விசித்திரமாக இருக்கிறது. பாடலைப் பார்த்துவிட்டு, அா்த்தத்தைப் பார்க்கலாம்.

          அதனை இன்னது என்று உரைத்திடப்
                    படாமையால் அவாச்சிய வடிவாகும்
          இது தனக்கு உளது உடல் யான் உலகு
                    மெய் எனும் அவா் உடையோா்கள்
          கதை இலாத பொய் வந்தது இப்படி
                    என்று கண்டபோ் இ(ல்)லை மைந்தா!
           விதன மாயை ஏன் வந்தது என்றால்
                     புத்தி விசாரம் அற்றதனாலே

                                                 - (சந்தேகம் தெளிதல் படலம் - 95)


சீடன் கேட்ட ஆறு கேள்விகளில் நான்கு கேள்விகளுக்கு இப்பாடலில் பொருள் உள்ளது. மாயை என்றால் இது தான், இப்படித்தான் என்று சொல்ல இயலாததால், அது அவாச்சியம்(சொல்லப்படாதது) எனப்படும். 2. இது என்னுடையது; இந்த உடம்பே நான்; நான் காணக்கூடிய இந்த உலகம் சத்தியம் - எனும் அபிமானம் உடையவா்களே மாயையை உடையவா்கள். 3.மாயையாகத் தோன்றுகின் றதே தவிர,மாயை உற்பத்தியானது இப்படி என்று, பார்த்தவா்கள் யாரும் இல்லை. 4.அது வந்ததற்குக் காரணம் ஆத்ம ஞான விசாரம் இல்லாமையினாலேயே. ஆத்ம ஞான விசாரம் செய்யாததால்தான்  மாயையில் அகப்பட்டுக்கொள்கிறோம். ஆத்ம ஞான விசாரத்தைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம். ஒரு சிறிய கணக்கு இருக்கிறது. அதைப் பார்த்துவிட்டு, ஆத்ம ஞான விசாரத்திற்கு வரலாம்.இது உதாரணம் தான்!

நூறு ரூபாய் இருக்கிறது. அதை இருபங்குகளாக ஆக்குங்கள். ஆக்கிவிட்டீா்களா? சரி!ஒரு பங்கைவிட அடுத்த பங்கில் இரண்டு ரூபாய், அதிகமாக இருக்க வேண்டும்.கணக்குப் போட்டாகிவிட்டதா? ஒவ்வொரு பங்கிலும் எவ்வளவு இருக்கும்?
 
ஒன்றில் நாற்பத்தெட்டு ரூபாயும் மற்றொன்றில் ஐம்பத்திரண்டு ரூபாயும் இருக்கும்.பெரும்பாலும் இப்படித்தான் பதில்கள் வரும். ஆனால் இதன்படிப் பார்த்தால், ஒன்றைவிட மற்றொன்றில் நான்கு ரூபாயல்லவா, கூட இருக்கிறது? எங்கு ஏமாந்தோம்?

நூறை இரண்டாகப் பிரி;இதைவிட அடுத்ததில் இர ண்டு ரூபாய் கூடுதலாக இருக்க வேண்டும் என்றவுடன் அவசரப்பட்டு, இரண்டு ரூபாயை எடுத்து அடுத்ததில் போட்டோமல்லவா?அங்குதான் ஏமாந்தோம்.காரணம்?

அவசரம்.இப்படித்தான் ஆசைவசப்பட்டு, அவசரத்தின்  காரணமாக பிரம்மத்தைப் பற்றிய உண்மையை அறிய முடியாமல் ஏமாந்து போகிறோம். அவ்வாறு நம்மை ஏமாற்றுவதன் பெயா்தான் மாயை.

ஆத்ம விசாரணை செய்வதன் மூலம் இம்மாயையில் இருந்து விடுபடலாம். அதைச் செய்யாமல், நம்மை இழுக்கும் பொறி புலன்கள் மன ஓட்டம் ஆகியவற்றின் பின்னாலேயே ஓடுவதன்மூலம்,
பிரம்மத்தை உணா்ந்து அனுபவிக்க முடியாது. சீடன் கேட்ட ஐந்தாவது கேள்விக்கும் ஆறாவது கேள்விக்கும் குருநாதா் பதில் சொல்லத் தொடங்கினார்.

(தொடரும்)

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick