சக்தி விகடன் - குன்றுதோறாடல் வழிபாட்டுக் குழு இணைந்து வழங்கும் வேல்மாறல் பாராயணம் - பூஜை!

அன்பார்ந்த வாசகர்களே!

வேல்மாறல் பாராயண பூஜையில் கலந்துகொள்ள, இந்த அறிவிப்பில் இடம்பெற்றுள்ள தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டு, உங்கள் பெயரை முன்பதிவு செய்து கொள்ளவும். முதலில் முன்பதிவு செய்பவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் அனுமதி வழங்கப்படும். பூஜையில் கலந்துகொள்ள முன்பதிவு செய்து அனுமதி பெற்ற வாசகர்கள், காலை 9 மணிக்குள்ளாகக் கோயிலுக்கு வந்துவிட வேண்டுகிறோம்.

நேரில் கலந்துகொள்ள இயலாத நிலையில் இருக்கும் வாசகர்களின் பிரார்த்தனைகளையும் வேல்மாறல் பாராயண பூஜையில் சமர்ப்பிக்கத் திட்டமிட்டுள்ளோம். அவர்கள் தங்களுடைய பிரார்த்தனையை முன்வைத்து, கீழ்க்காணும் கூப்பனை நிரப்பி, அப்படியே கத்தரித்து எங்களுக்கு 23.8.16 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்பிவைக்கவும். ஜெராக்ஸ் எடுத்தும் அனுப்பலாம். தனித்தாளில் எழுதி அனுப்பக்கூடாது.

இடம்: அருள்மிகு கதிர்காம முருகன் திருக்கோயில்

அவினாசிலிங்கம் பாளையம் பேருந்து நிறுத்தம் அருகில்

(திருப்பூரில் இருந்து அவினாசி செல்லும் வழியில், திருமுருகன் பூண்டி

திருத்தலத்தில் இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் உள்ளது)

நாள்: 28.8.16 - ஞாயிற்றுக்கிழமை

முன்பதிவுக்கு: 044 - 28524054

ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்கள் தவிர (காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை)

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick