கோபாலனே சாட்சி!

பூரிக்கு அருகில் தரிசிக்க வேண்டிய கண்ணன் திருத்தலம்!ஜி.பிருந்தா கணேசன்

பூரி என்றதும் நம் நினைவுக்கு வருவது அருள்மிகு ஜகந்நாதர் திருக்கோயிலும், பிரசித்தி பெற்ற ரத யாத்திரையும்தான். அந்தத் தலத்தில் இருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில் உள்ளது, மிகப் பழைமையானதும், புராணப் பெருமை மிகுந்ததுமான அருள்மிகு சாட்சிகோபாலன் திருக்கோயில். ஊர்ப் பெயரும் சாக்ஷிகோபால் என்றே வழங்கப்படுகிறது; ரயில்வே பாதையில் பூரிக்கு முன்னதாக வருகிறது சாக்ஷிகோபால் ரயில் நிலையம். ஸ்ரீகிருஷ்ணரின் கொள்ளுப் பேரனானன வஜ்நபி என்பவர், விரஜ மண்டலத்தில் பிரதிஷ்டை செய்த இரண்டு கோபாலன் விக்கிரகங்களில் ஒன்று இந்த சாட்சிகோபாலன்  என்கிறது தலபுராணம் (மற்றொன்று மதனகோபாலன்). இந்தக் கோயில் 5,000 வருடங்கள் பழைமையானது என்கிறார்கள்.

வித்யாநகரம் என்ற ஊரைச் சேர்ந்த அந்தணர்கள் இருவர் தீர்த்த யாத்திரைக்குப் புறப்பட்டனர். அவர்களில் முதியவரான அந்தணர் செல்வந்தராகத் திகழ்ந்தார். மற்றவரோ இளைஞர்- பரம ஏழை. இந்த இளைஞர் தன்னுடன் பயணித்த முதியவருக்கு வேண்டிய உதவிகளைச் செய்தபடி யாத்திரையைத் தொடர்ந்தார். இருவரும் காசி, கயா, பிரயாகை, மதுரா ஆகிய திருத்தலங்களைத் தரிசித்துவிட்டு, கடைசியாக பிருந்தாவனத்துக்கு வந்தனர். அங்கே குடிகொண்டிருந்த கோபாலனின் அழகில் மெய்ம்மறந்த இருவரும் அந்தத் தலத்திலேயே தங்கிவிட்டனர். இந்த நிலையில் முதியவருக்கு உடல்நலக் குறைபாடு ஏற்பட்டது. அவருக்குத் தேவையான சிசுருஷைகள் செய்து நன்கு கவனித்துக்கொண்டான் இளைஞன். அவனுடைய பணிவிடைகளால் வெகு சீக்கிரமே குணம் அடைந்த பெரியவர், தன் மகளை அவனுக்குத் திருமணம் செய்து தருவதாகக் கூறினார். ஆனால் அந்த இளைஞனோ, தான் எந்தவித பிரதிபலனை யும் எதிர்பார்க்காமல் பணிவிடை புரிந்ததாகவும், அடியவருக்கு செய்யும் பணிவிடை அந்த அனந்தனுக்கே செய்ததற்குச் சமமாகும் என்றும் கூறினான். மேலும், தன்னுடைய ஏழ்மை பெரியவரின் அந்தஸ்தை நெருங்கவிடாது என்றும்  அவன் கருதினான். பெரியவரோ தனது முடிவில் பிடிவாதமாக இருந்தார். அவனைச் சம்மதிக்க வைத்ததுடன், கோயிலுக்குச் சென்று கேசவனின் சந்நிதானத்திலேயே, தனது முடிவை எவராலும் மாற்ற முடியாது என்று சத்தியப் பிரமாணம் செய்துவிட்டார்.

ஒருவாறு, யாத்திரை முடிந்து இருவரும் ஊர் திரும்பினார்கள். முதியவர் தன் குடும்பத்தாரிடம் நடந்ததையும், தனது சத்தியத்தைக் குறித்தும் விவரித்தார். அதற்கு, அவருடைய குடும்பத்தினர் கடும் ஆட்சேபம் தெரிவித்ததுடன், படிப்படியாக பெரியவரின் மனதையும் மாற்றிவிட்டனர். இதுதெரியாமல், பெரியவர் முன்பு சொன்ன வாக்குறுதியை மனதில் கொண்டு  பெண் கேட்டு வந்தான் இளைஞன். ஒட்டுமொத்த குடும்பமும் சேர்ந்து அவனைத் துரத்தி அடித்தது. அவன் பஞ்சாயத்தைக் கூட்டினான். பஞ்சாயத்து முன்னிலையில் தான் வாக்குறுதி ஏதும் தரவில்லை என்று மறுத்துப் பேசினார் பெரியவர். பின்னர், ‘ஏதேனும் சாட்சிகள் உண்டா?’ என அந்த இளைஞனிடம் கேட்கப்பட்டது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்