சத்யசாயி வழிபட்ட சத்யம்மா!

ம.மாரிமுத்து

ந்திர மாநிலம், அனந்தபூர் மாவட்டத்திலுள்ள புட்டபர்த்தியில் அமைந்துள்ளது ஸ்ரீசத்யம்மா திருக்கோயில். இந்தக் கோயில் வளாகத்தில் இருக்கும் வேப்பமரத்தில் வளையல் கட்டிப் பிரார்த்தித்தால், கர்ப்பிணிப் பெண்களுக்கு சத்யம்மா அருளால் சுகப்பிரசவம் நிகழுமாம்.

சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்னர், புட்டபர்த்தியில் வசித்த பெரியவர் ஒருவரது கனவில் தோன்றிய பெண் தெய்வம் ஒன்று, தனக்குக் கோயில் கட்டி வழிபட்டால், இந்த ஊருக்கே காவலாகத் திகழ்வேன் என்று அருள்புரிந்ததாம். விடிந்ததும் ஊராரிடம் கனவை விவரித்தார் பெரியவர். பிறகு ஒட்டுமொத்த ஊரும் ஒன்றுகூடி, ஊரின் மையப்பகுதியில் அந்த தெய்வத்துக்கு கோயில் எழுப்பி வழிபட்டனர். அந்த தெய்வமே சத்யம்மா. அவளைக் கனவில் கண்ட பெரியவர், பின்னாளில் மகானாகத் திகழ்ந்த ஸ்ரீசத்யசாயிபாபாவின் தாத்தா என்று சிலிர்ப்புடன் விவரிக்கிறார்கள் உள்ளூர் பக்தர்கள்.

‘‘அன்னைக்கு ஆலயம் அமைந்து வெகு காலத்துக்குப் பிறகு, பக்தன் ஒருவன் அம்பாளைத் தொட்டு வணங்க முயற்சித்தபோது, அன்னையின் விக்கிரகத்தில் கை பின்னமானதாம். அன்றுமுதல் ஊரில் பலருக்கும் உடல் உபாதைகள் ஏற்பட்டன. அப்போது, மகான்  ஸ்ரீசத்யசாயிபாபாவும் உடல்நலம் குன்றினாராம். பிறகு,  உடற்பிணிக்கு காரணம் என்ன என்பதை ஞான திருஷ்டியின் மூலம் உணர்ந்த  ஸ்ரீசத்யசாயிபாபா, பின்னம் அடைந்த அம்பாள் விக்கிரகம் அருகிலேயே புதியதொரு விக்கிரகத்தை பிரதிஷ்டை செய்தாராம். அதன் பிறகு அவருக்கும் ஊர்க்காரர்களுக்கும் உடல் நலம் சீரானது’’ என்று அம்மனின் மகிமையைப் பகிர்ந்து கொண்டார்கள் ஊர்ப்பெரியவர்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்