‘அன்னை காமாட்சி அருள்புரிவாள்’

க்தி விகடன் மற்றும் தீபம் விளக்கேற்றும் எண்ணெய் நிறுவனம் இணைந்து வழங்கிய திருவிளக்கு பூஜை, சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள காஞ்சி காமகோடி ஸ்ரீசங்கர மடம் ஸ்ரீகாமாட்சியம்மன் திருக்கோயிலில், கடந்த 26.7.16 அன்று மாலை நடைபெற்றது.

திருவிளக்கு பூஜையை தொடங்கி வைத்துப் பேசிய அன்பர் நாராயணன், ``லலிதா சஹஸ்ரநாம பாராயணம் மிகவும் சிரேஷ்டமானது. அம்பாளின் நாமாக்களை சொல்லியபடி திருவிளக்கு பூஜை செய்தால், எண்ணிய எண்ணங்கள் எல்லாம் பூர்த்தியாகும்'' என்றவர் லலிதா சஹஸ்ரநாமத்தை சொல்லச் சொல்ல வாசகியர் திருவிளக்கு பூஜையை ஆத்மார்த்தமாகச் செய்தனர். விளக்கு பூஜையின் நிறைவில் பக்தி இசைப் பாடகர் சாஸ்தாதாசன் பக்திப் பாடல்களைப் பாடி மகிழ்வித்தார்.

``திருவிளக்கு பூஜையில் கலந்து கொண்டால், திருமாங்கல்ய பாக்கியம் கிடைக்கும் என்பார்கள். என் மகளுக்கு திருமணம் தடைப்பட்டுக் கொண்டிருக்கிறது.அவளுக்கு வெகு சீக்கிரத்தில் நல்ல வரன் அமையவேண்டும். என் மகள் நல்ல துணையுடன் தன் வாழ்க்கையைத் துவங்க வேண்டும். அதற்கு ஒரு வழி காட்டு தாயே என்று இந்த காமாட்சி தாயை வேண்டிக் கொண்டுதான், திருவிளக்கு பூஜையில் கலந்துக்கிட்டேன். அம்மனின் அருளால் சீக்கிரமே என் வேண்டுதல் நிறைவேறும் என்ற நம்பிக்கை இருக்கிறது'' என்றார் தாம்பரத்தைச் சேர்ந்த கோகிலாம்மாள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்