ராசிபலன்

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
ராசிபலன் ஆகஸ்ட் 16 முதல் 29 வரை‘ஜோதிடரத்னா’ கே.பி.வித்யாதரன்

சீர்த்திருத்த சிந்தனை கொண்டவர்களே!

உங்களின் பூர்வ புண்ணியாதிபதியான சூரியன் 17-ம் தேதி முதல் ராசிக்கு 5-ம் வீட்டிலேயே ஆட்சி பெற்று அமர்வதால், நினைத்தது நிறைவேறும். பணம் வரும். மகனுக்கும் மகளுக்கும் நல்ல வாழ்க்கைத் துணை அமையும். பூர்வீகச் சொத்து கைக்கு வரும். லாப வீட்டில் கேது வலுவாக இருப்பதால், பழைய கடன் பிரச்னையில் ஒன்று தீரும். வீடு- மனை வாங்க நினைப்பீர்கள். 

உங்களின் ராசிநாதன் செவ்வாயும் 8-ம் வீட்டில் ஆட்சி பெற்று அமர்ந்திருப்ப தால், பிரச்னைகள் ஒரளவு குறையும். சகோதரர்கள் ஆதரவாக இருப்பார்கள். ஆனால் 26-ம் தேதி முதல் சுக்கிரன் 6-ம் வீட்டில் மறைவதால், இருமல், கழுத்து வலி ஆகியன வந்து நீங்கும். 8-ல் சனியும், 6-ல் குருவும் மறைந்திருப்பதால், உங்களைப் பற்றிய வீண் விமர்சனங்கள் அதிகமாகும். எவரையும் குறை கூற வேண்டாம். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி லாபம் வரும். உத்தியோகத் தில், உங்களின் மேலதிகாரிகள் கூறும் அறிவுரையை மனமுவந்து ஏற்றுக்கொள் ளுங்கள்; முன்னேற்றம் உண்டு. கலைத் துறையினரே! விமர்சனங்களைத் தாண்டி முன்னேறுவீர்கள்.

போராட்டங்களைக் கடந்து சாதிக்கும் தருணம் இது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்