முன்னோர்கள் சொன்னார்கள்

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
ஜோதிட சிந்தனைகள் 2-ம் பாகம்சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

ராசிக் கட்டத்தில் பல வீடுகளில் தென்படும் கிரகங்கள் அத்தனையும், அம்சகக் கட்டத்தில் குரு வீட்டில் ஒதுங்கியிருந்தால்... அதாவது அம்சகக் கட்டத்தில் தனுசு ராசியிலும் மீன ராசியிலு மாக இடம்பிடித்து இருக்கிறார்கள். அதேநேரம், ராசிக் கட்டத்தில் அத்தனை கிரகங்களும் லக்ன கேந்திரத்தில் 1, 4, 7, 10 ஆகிய வீடுகளில் அல்லது 9-ம் வீட்டில் அல்லது 2-ம் வீட்டில் அமர்ந்து இருக்கும் அமைப்பு இருந்தால், இயல்பாகவே அவன் உலகவியல் சுகபோகங்களில் பற்றற்ற நிலையை அடைந்திருப்பான்.

தான் இருக்கும் இடத்தை, சொந்த வீட்டைத் துறந்து, பல தத்துவ விளக்கங்களின் உள்ளர்த்தத் தை உணர்ந்து, அவற்றை பொதுமக்களுக்குப் பகிர்ந்தளிக்கும் நோக்கில் பல நூல்களை இயற்றி,
உலகம் உய்ய உறுதுணையாக தனது வாழ்க்கை யைத் திருப்பிவிடுவான் என்கிறது ஜோதிடம் (ஜீவாம்சகஸ்தா; ஸதலாக்ர ஹேந்த்ரா:...).

ராசிக் கட்டத்தில் கிருத்திகை முதல் பாதத்தில் இருக்கும் கிரகம், அம்சகக் கட்டத்தில் தனுசில் வந்துவிடும். கிருத்திகை 4-ம் பாதத்தில் இருக்கும் கிரகம், அம்சகத்தில் மீனத்தில் வந்துவிடும். திருவாதிரை முதல் பாதம், 4-ம் பாதத்தில் உள்ள கிரகம், தனுசிலும் மீனத்திலும் வந்துவிடும்.ஆயில்யம் 1, 4-ம் பாதங்களில் இருப்பவை, தனுசிலும் மீனத்திலும் வந்துவிடும். உத்திரம் 1, 4-ம் பாதங்கள், தனுசு-மீனம் ஆகியவற்றில் இடம்பிடித்துவிடும். சுவாதி 1, 4-ம் பாதங்கள், தனுசு-மீனத்தில் இடம்பிடித்துவிடும். அனுஷம் 1, 4-ம் பாதங்களும் அம்சகத்தில் தனுசு-மீனம் ஆகியவற்றில் இடம் பிடித்துவிடும். உத்திராடம் 1, 4-ம் பாதங்களும், சதயம் 1, 4-ம் பாதங்களும், ரேவதி 1, 4-ம் பாதங்களும் முறையாக தனுசு, மீனம் ராசிகளில் இடம்பிடித்துவிடும்.

ராசிக் கட்டத்தில் கிருத்திகை, திருவாதிரை, ஆயில்யம், உத்திரம், சுவாதி, அனுஷம், உத்திராடம், சதயம், ரேவதி ஆகிய நட்சத்திரங்களில், குறிப்பிட்ட பாதத்தில் அமர்ந்த கிரகங்கள், அம்சகத்தில் தனுசிலோ மீனத்திலோ ஒன்றிவிடும். ராசிக் கட்டத்தில் இந்த நட்சத்திரங்களில் அமர்ந்த கிரகங்கள் லக்னத்தில் இருந்து 1, 4, 7, 10, 9, 2 - இந்த வீடுகளில் அமர்ந்திருக்க வாய்ப்பு உண்டு. இந்த ஐந்து வீடுகளும் பிறந்தவனது தரத்தை நிர்ணயம் செய்பவை. ஆயுள், மகிழ்ச்சி, பெருந்தன்மை, செயல்பாடு, பிறப்பிலேயே ஏற்பட்ட தகுதி, செயல்படுத்தும் திறனுக்கு உகந்த ஒத்துழைப்பு ஆகிய அத்தனையையும் அவனை அடையச் செய்வன.

அத்தனைப்பேரும் அம்சகத்தில் குரு வீட்டில், தனுசு, மீனம் ஆகியவற்றில் அமர்ந்திருப்பது, அவனது திறமையின் வெற்றிக்குச் சான்றாக அமைந்துவிடுகிறது. பற்றின்மை வலுப்பெற்ற நிலையில், சொந்த வீடு என்ற பற்று அகன்றதால், அவன் வெளியேறி விடுகிறான் என்று பொருள். அம்சகத்தில் குருவின் கட்டம் ஒன்பதாகவும், பன்னிரண்டாகவும் அமைந்திருக்கும். ராசி புருஷனின் கோட்பாட்டில், 9-பிறப்பின் தகுதியை முழுமையாக்கி பூர்ணத்துவம் பெற வைக்கிறது. 12-பிறப்பின் பூர்ணத்துவத்துக்கு எதிரிடையானவற்றை இழக்கவைக்கிறது. பத்தும், பன்னிரண்டும் ஒன்றுக்கொன்று 4, 10 என்கிற கேந்திரத்தில் அமைந்தபடியால், ஒன்பதை... 4-ம் கேந்திரமான மீனம் ஒத்துழைப்பை அளித்து, 9-ஐ அதாவது ஐந்தின் ஐந்து- பூர்வபுண்ய பாவாத்பாவத்தை செழிப்பாக்கி, உலகம் போற்றும் உத்தமனாக மாற்றிவிடுகிறது.

அவனுடைய சிறப்பான கர்மவினை, பிறக்கும் வேளையில் தனுசிலும் மீனத்திலும், அம்சகத்தில் உள்ள எல்லா கிரகங்களும் அமையும்படி, ராசிக்கட்டத்தில் கேந்திரத்திலும் 1, 4, 7, 10, 9 -லும் இரண்டிலும் அமைந்திருக்கும் அமைப்பை ஏற்படுத்திவிட்டது. இப்படியும் சொல்லலாம். அதாவது, எந்த வேளையில் பிறந்தால் அத்தனை கிரகங்களும் தனுசிலும் மீனத்திலும் அம்சகத்தில் ஒதுங்கி விடுமோ, அந்த வேளையை கர்மவினை யின் தரம் தேர்ந்தெடுத்தது என்றும் சொல்லலாம்.

பிறந்த வேளையை வைத்து ஆண், பெண் தரத்தை வரையறுத்த பிறகு, திருமணத்தில் பொருத்தத்தை ஆராய வேண்டும். பொருத்தக் கோட்பாடுகளை மனப்பாடம் பண்ணி, கிளிப்பிள்ளை போல் ஒப்புவித்து பொருத்த முடிவை எட்டுவது, ஜோதிடத்துக்கு ஆற்றும் சேவையல்ல; மக்களுக்கு உதவும் சிபாரிசும் அல்ல.  இரண்டு பொருள்களின் இணைப்பு வலுப்பெற, இரண்டு பொருள்களின் தரம்தான் முக்கியம். பொது மருத்துவத்தில் முழுத்தேர்ச்சி பெற்றவர்கள், தனி மருத்துவத்தை ஏற்கிறார்கள். கண், காது, எலும்பு போன்ற சிறப்பு மருத்துவம் பெற்றவர்கள் அனைவரும், பொது மருத்துவத்தில் முழுத்திறமை பெற்றவர்களே.

அதேபோல், ஜோதிடத்தில் முழுத் திறமையை பெற்ற பிறகு, பொருத்தத்தில் செயல்பட வேண்டும். கையேடுகளை வைத்து வழிகாட்டியாக மாறும் எண்ணம், ஜோதிட பிரபலங்களுக்கு இருக்கக்கூடாது. ஜோதிட சாஸ்திரம் எல்லோருக்கும் புரியும்படி எளிமையாகத்தான் படைக்கப்பட்டிருக்கிறது. நம்மோடு என்றும் ஒட்டிக்கொண்டிருக்கும் காலத்தின் அலசல், என்றைக்கும் எளிமையானதுதான். திறமை யற்றவன் கடினம் என்று சொல்வதால், அது கடினமாகிவிடாது. அதுவே விஞ்ஞானம். அதைத் தெரிந்துகொள்ள விஞ்ஞானக் கருவிகள் உதவாது. அந்தக் கருவிகள் செயற்கையானதால், இயற்கை ஜோதிடத்துக்கு அது உதவாது. இயற்கையின் விளைவுதான் ஜோதிடம். அதன் பெருமையை சிறுமையாக்கும் சொற்றொடர்கள், பாமரர்களை ஈர்க்கும் பண்டிதனை நெருங்காது.

ஜோதிடத்தைப் படித்து ஆராய்ந்து திறமை பெற்று, பொருத்தம் சொல்லும் முறையை கையில் எடுக்க வேண்டும். அந்த எண்ணம் தான் பெருந்தன்மைக்கு அடையாளம். கணினியின் கணிப்பில் பலன் சொல்வது உண்மை ஜோதிடமாகாது. மாவரைக்கும் கல்லுக்கு எந்த சுவையும் தெரியாது. சுமை தாங்கிக்கு பொருளின் எடையும், வாசனையும், தரமும் தெரியாது. பொருத்தம் பார்ப்பதுதான் ஜோதிடம் என்று கிணற்றுத் தவளையாக மாறக்கூடாது. இருவரின் தரம் சிறப்பாக இருக்கிறதா என்பதை இறுதி செய்வதுதான் பொருத்தத்தின் பொருள். பத்துப் பொருத்தங்கள் அவர்களின் தரத்தை இறுதி செய்யாது. அவர்களின் தரம் சிறப்பாக இருந்தால், பொருத்தம் ஒத்துழைக்கும். பொருந்துகிறது என்றால் ‘தகுதியில் பொருந்துகிறது’ என்று பொருள். எல்லாவற்றிலும் தகுதியை வைத்துதான் பெருத்தத்தை இறுதி செய்கிறார்கள்.

‘ஆனுகூல்யம்’ என்ற சம்ஸ்கிருத சொல் ‘ஒத்துழைப்பு’ என்று பொருள்படும். ‘எதற்கு ஒத்துழைப்பு’ என்ற வினாவுக்கு, ‘அவர்கள் இருவரது வாழ்க்கைக்கு ஒத்துழைப்பு’ என்று பதில் வரும். வாழ்க்கை வேறு, பொருத்தம் வேறு. பொருத்தமே வாழ்க்கையை சீராக்காது. வாழ்க்கை முழுமையாக சிறப்பாக இருந்தால், அதற்கு பொருத்தம் ஒத்துழைக்கும் என்று பொருள். பத்துப் பொருத்தங்கள் அவர்களது வாழ்க்கையின் தரத்தை வரையறுக்காது. வாழ்க்கையின் தரத்தை ஆராய, அவர்களது பிறந்தவேளையை ஆராயவேண்டும். அதில் கவனம் செலுத்தாமல், பொருத்தத்தை மட்டும் உதிர்த்து அவர்களை இணையவைப்பது அறிவீனம்.

ஜோதிடத்தை அறிய விரும்பாதவன், நடை முறையில் ஜோதிடம் விபரீத விளைவுகளை ஏற்க வைப்பதால், அதில் நம்பகத்தன்மை இல்லை என்று சொல்லி முற்றுப்புள்ளி வைக்கிறான். ‘பொருத்தம் பார்ப்பது உண்மையோ, பொய்யோ என்று தெரியாது; பலபேருக்கு வாழ்வளித்துக் கொண்டிருக்கிறது. அது உண்மை’ என்கிறான். பலர் வாழ அது பயன்படுவதால், அதை அழிக்கக் கூடாது என்பவர்களும் உண்டு.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்