உச்சிஷ்ட கணபதிக்கு மகா கும்பாபிஷேகம்!

நல்லது நடந்தது!

திருநெல்வேலி சந்திப்பு பழைய பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் ஒன்றரை கி.மீ. தொலைவில், வடக்கு புறவழிச் சாலையில் தாமிரபரணி கரையோரம் அமைந்திருக்கிறது மணிமூர்த்தீஸ்வரம்.  இங்குள்ள 900 வருடங்கள் பழைமையான விநாயகர் கோயில் சிதிலம் அடைந்து கிடந்தது குறித்த கட்டுரையை சக்தி விகடன் ‘ஆலயம் தேடுவோம்’ பகுதியில் வெளியிட்டிருந்தோம்.

விநாயகப்பெருமானுக்கான தனிக்கோயில், அண்ணாந்து பார்க்கவைக்கும் பிரமாண்ட மதில்கள், அகன்ற பிராகாரங்களுடன் திகழ்ந்த ஆலயம், சித்திரை மாதம் முதல் மூன்று நாட்கள் சூரியன் தன் கிரணங்களால் இங்கு அருள்பாலிக்கும் மூலவர் உச்சிஷ்ட கணபதியை வழிபடும் அதிசயம் நிகழும் திருக்கோயில்... என இந்த ஆலயத்தின் சிறப்புகளைக் குறிப்பிட்டிருந்ததுடன், ‘தற்போது வெறும் காரைச் சுவர்களுடன் திகழ்கிறது  இந்த ஆலயம். மேலும், பல இடங்களில் தூண்கள் வலுவிழந்து, சிற்பங்கள் சிதைந்து, மண்டபங்களும் சிதிலமடைந்து கிடக்கின்றன’ என்று உச்சிஷ்ட கணபதி கோயிலின் அப்போதைய அவல நிலையையும் அந்தக் கட்டுரையில் விவரித்திருந்தோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்