இசை விழாவும், ஸ்வர்ண பாத்திர சமர்ப்பணமும்!

மந்த்ராலயத்தில்...ம.மாரிமுத்து

க்த பிரகலாதனின் அம்சமாக அவதரித்தவர் ஸ்ரீராகவேந்திரர். தம்முடைய ஜீவித காலத்திலும் சரி, பிருந்தாவன பிரவேசத்துக்குப் பிறகும் சரி... எண்ணற்ற அதிசயங்களைத் தம்முடைய பக்தர்களின் வாழ்க்கையில் நிகழ்த்தி வருகிறார். தமது பிருந்தாவன பிரவேசத்துக்குப் பிறகு அவர் நிகழ்த்திய முதல் அதிசயம், அவருடைய சீடரான அப்பணாச்சார் என்பவர் முடிக்காமல் விட்ட ஒரு ஸ்லோகத்தை நிறைவு செய்ததுதான்!

ஸ்ரீராகவேந்திரர் தாம் ஜீவ சமாதி அடையத் திருவுள்ளம் கொண்டார். அவருடைய சீடரான அப்பண்ணாச்சார் அருகில் இருக்கும்போது தம்மால் அப்படி பிருந்தாவனப் பிரவேசம் செய்யமுடியாது என்பதால், தாம் ஜீவசமாதி அடைய இருப்பது பற்றி மற்றவர்களிடம் தெரிவித்து வருமாறு அவரை அனுப்பி விடுகிறார். தம் குருநாதர் இன்னும் சில காலத்தில் ஜீவசமாதி அடையப் போவதாக எண்ணிக்கொண்ட அப்பண்ணாச்சாரும் புறப்பட்டுச் சென்றுவிடுகிறார். அப்பண்ணாச்சார் சென்றதும் திவான் வெங்கண்ணாவிடம் விஷயத்தைச் சொல்லிவிட்டு ராகவேந்திரர் ஜபம் செய்யத் தொடங்குகிறார்.இந்த விஷயம், துங்கபத்திரையின் மறுகரையில், பிச்சாலயா என்னும் ஊரில் இருந்த அப்பண்ணாச்சாருக்குத் தெரிய வருகிறது. தன் குருநாதர் பிருந்தாவன பிரவேசம் செய்வதற்கு முன்பாக அவரை தரிசிக்க வேகமாகப் புறப்பட்டபோது துங்கபத்திரையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. எனவே, குருநாதரைப் போற்றும் ஸ்லோகங்களைப் பாடியபடியே ஆற்றைக் கடந்து செல்கிறார் வெங்கண்ணா. அதற்குள் பிருந்தாவனம் மூடப்பட்டு விடுகிறது. குருநாதரை தரிசிக்க முடியாத ஏக்கத்தில், கடைசி ஸ்லோகம் பூர்த்தி அடையாமல் பாதியிலேயே நின்றுவிடுகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்