நாரதர் உலா

பிரசாத பிசினஸ்!

‘நாராயண, நாராயண’ என்ற குரல் கேட்டது. கூடவே, புளியோதரை மற்றும் மிளகு வடையின் வாசமும் சேர்ந்தே வந்தது. “எப்போதும் நீர்தானே என்னை உபசரிப்பீர்! ஒரு மாறுதலுக்கு, நான் உமக்காக இந்தப் புளியோதரையையும் மிளகு வடையையும் வாங்கி வந்தேன்’’ என்றபடி, நம்மிடம் அந்தப் பொட்டலங்களை நீட்டினார் நாரதர்.

வாங்கிக் கொண்டு நன்றி தெரிவித்த நாம், ‘‘பிரசாதத்தைப் பிறகு சாப்பிடுகிறோம். முதலில் நீர் எந்தக் கோயிலுக்குப் போய் வந்தீர்? அதைச் சொல்லும்?’’ என்று கேட்டோம்.
‘‘சொல்கிறேன். அதற்கு முன்... பிரசாதம் என்பதற்கு அர்த்தம் தெரியுமா உமக்கு?’’ என்று கேட்டார் நாரதர்.

‘‘சாதம் என்றால், நாம் பசிக்காக உண்கிற சாதாரண உணவு. அதுவே, இறைவனுக்குப் படைக்கப்பட்ட பின்பு புனிதத்துவம் பெற்றுப் பிரசாதம் ஆகிறது. ‘பிர’ என்று அடைமொழி கலந்தாலே, அது புனிதத்துவம் பெற்றது என்றாகிவிடுகிறது. வசனம் என்றால் ஜனங்கள் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வது. பிரவசனம் என்றால், இறைவனின் புகழைப் பாடுவது. தோஷம் என்றால், கெடுதலானது; பிரதோஷம் என்பது கெடுதல் நீங்கிப் புண்ணியம் பெற்றது எனப் பொருள்...” என்று நாம் நமக்குத் தெரிந்தவற்றை எடுத்து விட, ‘போதும், போதும்’ என்று கையமர்த்தினார் நாரதர்.

‘‘ஆமாம். பிரசாதம் என்பது ஒருகாலத்தில் புனிதமாகத்தான் இருந்தது. இன்றைக்கு அப்படி இல்லை என்பதுதான் நமது துர்பாக்கியம்” என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்