புண்ணிய பூமி

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
நல்லனவெல்லாம் நல்கும் குக்கே சுப்ரமண்யாகாஷ்யபன்

ர்நாடகாவின் ஏழு முக்கிய, பிரதான புனித க்ஷேத்திரங்களில் குக்கேயும் ஒன்று. குமார பர்வதம் எனப்படும் குமாரமலைக்கும், சேஷ பர்வதம் எனப்படும் சேஷ மலைக்கும் இடையில் குக்கே அமைந்துள்ளது. இயற்கை அழகு கொட்டிக் கிடக்கும் குக்கே, புராண காலத்திலிருந்தே மிகவும் புகழ் வாய்ந்தது.

இங்குதான் தாரகாசுரனையும், சூரபத்மனையும், பத்மாசுரனையும், அல்லல்கள் அளித்த அசுரர் அநேகரையும் ஷண்முகன் சம்ஹாரம் செய்தான் என்று இங்கிருப்பவர்களால் நம்பப்படுகிறது.

அசுரரை அழித்த பின் தனது வாளையும், மற்றைய ஆயுதங்களையும் குமாரமலைக்கு அருகில் ஓடிய நதி நீரில் தூய்மைப்படுத்தினான் குமரன்; அன்றிலிருந்து அந்நதி குமார தாரா என்று அழைக்கப்பட்டது என்றும் கூறப்படுகிறது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்