ஜோதிட சிந்தனைகள் 2-ம் பாகம்

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
முன்னோர்கள் சொன்னார்கள்சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

பிறந்த வேளை தனுசு லக்னம். அந்த லக்னம் 8-வது அம்சகத்தில் பிறப்பு நிகழ்ந்திருக்கிறது. ராசியின் ஒன்பது அம்சகத்தில் கடைசியில் இருந்து இரண்டாவது அம்சகத்தில், அதாவது 8-ல் இணைந்திருக்கிறது. அதாவது தனுசு ராசியின் 30 பாகைகளில் 26-வது பாகையில் பிறப்பு ஏற்பட்டிருக்கிறது.

பிறப்பு நிகழ்ந்த பாகையில் இருந்து முன்னும் பின்னும் 15 பாகைகள் இணைந்து மொத்தம் 30 பாகைகள் லக்ன பாவம் ஆகும். அதாவது, இந்த லக்ன பாவம் தனுசிலும் மகரத்திலுமாக இணைந்திருக்கும். மகர ராசியில் 11 பாகை வரை லக்னம் வியாபித்து இருக்கும். இப்போது  மகரம் 11 பாகை வரை லக்னபாவம்; கும்பம் 11 பாகை வரை இரண்டாம் பாவம்; மீனம் 11 வரை மூன்றாம் பாவம். இப்படி, தனுசு வரை பாவங்களின் அளவு இருக்கும். கடக ராசியில் ஐந்தாவது பாகையில் இருக்கும் ராகு பாவத்தில் 7-லும், சிம்மத்தில் இரண்டாவது பாகையில் இருக்கும் செவ்வாயும், 9-வது பாகையில் இருக்கும் சூரியனும் பாவத்தில் 8-லும் இருப்பார்கள். கட்டத்தில் பார்க்கும்போது 8-ல் ராகுவும், 9-ல் செவ்வாயும் சூரியனும் இருப்பதாக எடுத்துக்கொள்வோம். பாவத்தில் ராகு ஏழிலும், செவ்வாயும் சூரியனும் 8-லும் இருப்பார்கள்.

ஜாதகப் பொருத்தம் பார்க்கும்போது, பாவத்தை வைத்து நிர்ணயிக்கவேண்டும் என்கிறது ஜோதிடம் (பாவப்ரவிருத்தௌஹி பலப்ரவிருத்தி: பாவசந்தை விபலோக்ரஹேந்த்ர:) அம்சகக் கட்டத்தில் இருக்கும் கிரகங்களை ஆராய்ந்தால், ராசிக் கட்டத்தில் இருக்கும் கிரகம் எந்த பாகையில் இணைந்திருக்கிறது என்பது புலனாகும். ராசியில் எந்த பாகையில் கிரகம் அமைந்திருக்கிறது என்பதை விளக்கிக்கூற அம்சகக் கட்டம் உருவாகியிருக்கிறது. ராசிக் கட்டத்தின் விளக்கவுரையாக அம்சகக் கட்டம் பயன்படுகிறது. இப்படியிருக்க, அம்சகக் கட்டம் இல்லாமல் ராசியை மட்டும் வைத்து பலன் சொல்வதில் ஜோதிடத்துக்கு உடன்பாடு இல்லை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்