சங்கல்பமும் தானங்களும்...

மகா பாக்கியம்படங்கள்: க.சதீஷ்குமார்

காமகம் தினத்தில் குளத்தில் புனித நீராடுவதற்கு முன்பாக முறைப்படி சங்கல்பம் செய்துகொண்டு நீராடவேண்டும் என்பது நியதி. அதுபற்றி, கும்பகோணம் அருள்மிகு நாகேஸ்வரர் கோயிலில் 40 ஆண்டுகள் பணிபுரிந்தவரும் தன்னுடைய பணிக் காலத்தில் 3 மகாமகங்களைக் கண்டவருமான 74 வயது பெரியவர் சர்வசாதக சிரோமணி சிவஸ்ரீ வி.ராமநாத சிவாசார்யரிடம் பேசினோம்.

மகாமகக் குளத்தில் புனித நீராடுவதற்கென்று ஏதேனும் நியதிகள் உள்ளதா? அதற்கென்று சங்கல்பம் எதுவும் செய்துகொள்ள வேண்டுமா?

மகாமகக் குளத்தில் புனித நீராடுவதற்கு முன்பாக சங்கல்பம் செய்துகொள்ள வேண்டியது அவசியம். நாம் எந்த ஒரு காரியத்தையும் தொடங்குவதற்கு முன்பு, அன்றைய திதி, வார, நக்ஷத்திர, யோக, கரணம்  ஆகியவற்றைக் கொண்டு, அதற்கு உரிய மந்திரங்களை உச்சரித்து எந்த நோக்கத்துக்காக அல்லது பலனுக்காக அந்த பூஜையை செய்கிறோமோ அதற்கு உரிய கோரிக்கையை அந்தந்த கடவுளுக்கு முன் சமர்ப்பணம் செய்து துவங்குவதுதான் சங்கல்பம். பூஜைகள், புண்ணிய நதி அல்லது தீர்த்தங்களில் நீராடல், முன்னேர்களுக்கான திதி, தானம் கொடுத்தல் ஆகிய அனைத்துக்குமே தனித்தனி சங்கல்பங்கள் உண்டு.

மகாமகத்தின்போதும் சங்கல்பம் செய்துகொள்வது அவசியம். மகாமகக் குள  நீராடலுக்கு முன்பு காவிரியில் சங்கல்பம் செய்து கொண்டு  நீராட வேண்டும். அதன் பின்னர்  பஞ்சகவ்யம் உட்கொள்ள வேண்டும். மகாமகக் குளத்தில் உள்ள ஒவ்வொரு தீர்த்தத்திலும் சங்கல்பம் செய்து நீராட வேண்டும். அதன் பின்னர் தானம் செய்வது மிகவும் விசேஷம். ஆனால்,  இன்றைக்கு மகாமகத்துக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை கோடியை நெருங்குவதால் அவ்வாறு செய்வது சாத்தியமில்லை.  எனவே, ஒரே சங்கல்பமாக, அனைத்து தீர்த்தங்கள், ஜீவநதிகள், தேவர்கள், சக்திகள்  போன்றவர்களை நாம் செய்யும் சங்கல்பத்தில் அழைத்து, நமது வேண்டுதலுக்கு உரிய பலனைக் கொடுக்குமாறு பிரார்த்தித்துக் கொண்டு புனித நீராடவேண்டும். நீராடலுக்குப் பின்னர் நம்மால் இயன்ற தானங்களைச் செய்ய வேண்டும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்