காவிரித்தாய் பெற்ற புண்ணியம்!

புனித நதி

மாசிமகத்தன்று காவிரியிலும் நீராடிய பிறகே மகாமக தீர்த்தமாடல் பூர்த்தியாகிறது. அன்று காவிரியில் நீராடி பக்தர்கள் புண்ணியம் பெறுகிறார்கள் என்றால், காவிரித் தாய்க்கும் பெரியதொரு புண்ணியம் வாய்க்கிறது. ஆம்! வருடாந்திர மாசி மகத்தன்றும், 12 ஆண்டு களுக்கு ஒருமுறை வரும் மகாமக திருநாளிலும் சார்ங்க பாணி பெருமாள் காவிரியில் தீர்த்தவாரி காண்கிறார்.
இது குறித்த மகத்துவத்தை, பாஞ்சராத்ர ஆகமத்தில் ஸ்ரீப்ரஸ்ன சம்ஹிதை கற்றுத் தேர்ந்தவரும், ஸ்ரீசார்ங்கபாணி, ஸ்ரீசக்ரபாணி மற்றும் ஸ்ரீராமசாமி கோயில்களில் அர்ச்சகராக 20 வருட அனுபவம் கொண்ட எஸ்.சௌந்தரராஜ பட்டாசார்யார் சொல்லக் கேட்டோம்.

சார்ங்கபாணி பெருமாள் ஹேமரிஷியின் பெண்ணாக அவதரித்த கோமளவல்லித் தாயாரை திருக்கல்யாணம் செய்துகொள்ள வைகுண்டத்தில் இருந்து ரதத்தில் எழுந்தருளினார். ‘சிலா ரதம்’ என்ற அந்தக் கல் ரதத்தில்தான் பெருமாள் இந்தக் கோயிலில் எழுந்தருளி உள்ளார்.  இது தவிர உற்சவ காலங்களில்  எழுந்தருள்வது சித்திரைத் திருத்தேர் அல்லது பெரிய தேர் எனும் மரத்தினாலான ‘தாரு ரதம்’; திருமங்கை ஆழ்வார் எழுதிய சார்ங்கபாணி பெருமாளுக்கு மட்டுமே உரித்தான பாசுரங்களைக் கொண்ட ‘திரு எழு கூற்றிருக்கை’ எனும் ‘ஞான ரதம்’ ஆகிய  மூன்று விதமான தேரில் அமர்ந்து பெருமாள் அருள்பாலிக்கிறார். இம்மூன்று ரதங்களையும் வணங்குபவர்களுக்கு அவரவரின் ஆசைகளை பெருமாள் பூர்த்தி செய்து அருள்பாலிக்கிறார் என்பது நம்பிக்கையாகும். சூரியனின் கர்வத்தை மகாவிஷ்ணு தனது சக்ராயுதத்தைக் கொண்டு அடக்குகிறார். ஆகையால் இந்த க்ஷேத்ரத்திற்கு பாஸ்கர[சூரிய] க்ஷேத்ரம் என்றும் பெயர் உண்டு.  இதன் காரணமாக இங்கு பெருமாள் சந்நிதிக்கு நேர்வாசல் கிடையாது. உத்தராயன காலத்துக்கு ஒரு வாசலும், தக்ஷிணாயன காலத்துக்கு ஒரு வாசலும் வகுத்துள்ளனர்.

‘அபரியாப்தம்’ எனும் வடமொழி சொல்லுக்கு ‘திகட்டாத இன்பம்’ அளிப்பது என்று பொருள். ஆகவே ஸ்ரீசார்ங்கபாணியை எத்தனை முறை தரிசித்தாலும் தெவிட்டாத இன்பமும் அருளும் கிட்டும் என்பது உறுதி. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்