குடமூக்கே... குடமூக்கே!

பூமேய வாரணனும் நாரணனும் வாரணனும் பொற்பூ மாலைத்
தேமேய விண்ணவரும் நண்ணவரும் பசுமுதலாம் சிறப்பு நல்கி
மாமேய குடமூக்கின் இடமூக்கின் பார்கருணை வடிவின் மேய
பாமேய புகாதி கும்பேசர் தாமரைத்தாள் பணிந்து வாழ்வாம்


என்று ஆதிகும்பேஸ்வரரைப் போற்றுகிறது திருக்குடந்தைப் புராணம். அப்பரும் சம்பந்தரும்கூட இந்தப் பெருமானைப் பாடிப் பரவியிருக்கிறார்கள்.

கும்பகோணத்தில் பற்பல கோயில்கள் உண்டு. இவற்றுள் தேவாரப்பாடல் பெற்ற திருக்கோயில்கள் மூன்று. அவை: குடமூக்கு (கும்பேஸ்வரர் கோயில்), குடந்தை கீழ்க்கோட்டம் (கும்பகோணம் நாகேஸ்வரம் கோயில்), குடந்தைக் காரோணம் (பலருடைய எண்ணப்படி சோமேஸ்வரர் கோயில்; காசி விசுவநாதர் கோயில் என்றும் கூறுவதுண்டு).

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்