திருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 20

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
சத்தியப்பிரியன், ஒவியம்:ஸ்யாம்

34. இடைகழியே கண்டேனோ ஆழ்வார்களைப் போலே?

நல்ல முன்னிருட்டு நேரம். திருக்கோவிலூர் அருகில் வர வர நல்ல மழையும் சேர்ந்து கொண்டது. உலகளந்த பெருமானை சேவிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் வந்த பொய்கையாழ்வாருக்கு கடும் மழையில் மாட்டிகொண்டு விடக்கூடாதே என்று அச்சம். சுற்றும் முற்றம் பார்த்தார், சன்னதித் தெருவில் ஒரு திருமாளிகையின் கதவு திறந்திருந்தது. மழை நிற்கும் வரையில் ஒதுங்கியிருக்கலாம் என்று அந்தத் திருமாளிகையின் கதவை தட்டினார்.

“ யாரு வேணும் ? “ என்றபடி மிருகண்டு முனிவர் வெளியில் வந்து பொய்கையாழ்வார் நிற்பதை பார்த்தார். வெளியில் மழையை பார்த்தார்.

 “தேவரீர். இங்கே மழை நிற்கும்வரை தங்க இடமுண்டோ ? “ என்றார்.

“ இந்த இடைகழிதான் உண்டு “ என்று ரேழியை காட்டிவிட்டு மிருகண்டு முனிவர் உள்ளே போய்விட்டார். சின்ன ரேழி. மழை இரவில் துளி வெளிச்சமும் இல்லை. ஒருவர் படுக்கக்கூடிய ரேழி. பரவாயில்லை இரவு தங்கிவிட்டு காலையில் பெருமாளை சேவித்துவிட்டு கிளம்புவோம் என்று படுக்க எத்தனித்தார்.

தட் தட் தட்.

வாசல் கதவில் மீண்டும் சத்தம் கேட்டதால் பொய்கையார் போய் திறந்தார்.  வெளியில் பூதத்தாழ்வார்.

“ மழைக்கு ஒதுங்க இடமுண்டோ? “ என்றார்.

“ சின்ன இடைகழி ஒன்று உள்ளது. அதில் ஒருவர் படுக்கலாம். இருவர் இருக்கலாம். வாருங்கள். “என்று அழைத்து சென்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்