ஆலயம் தேடுவோம்!

ஐயன் கரையில்; அம்பிகை நீரில்..!எஸ்.கண்ணன்கோபாலன்

தியாக ஸ்வரூபி; கருணா மூர்த்தி போன்ற திருநாமங்களுக்குப் பொருத்தமாகத் திகழ்பவர் நம் ஐயன் சிவபெருமான். அதனால் அவர் பட்ட சோதனைகள்தான் எத்தனை எத்தனை? பஸ்மாசுரனுக்கு வரம் கொடுத்து பட்ட கஷ்டமும், தேவர்களுடன் நம்மையும் இந்த பிரபஞ்சத்தையும் காப்பதற்காக ஆலகால விஷத்தை உகந்து ஏற்றதும், இன்னும் எத்தனையோ அடியவர்களுக்காக அவர் எதிர்கொண்ட சோதனை களும் அவருடைய தியாக சிந்தனை, அன்பு, கருணை போன்ற நற்பண்புகளை வெளிப்படுத்துகின்றன. அதனால்தான், ‘அன்பே சிவம்’ என்றனர் ஆன்றோர்.

நம் ஐயன் ஏற்ற சோதனைகளும் அதனால் அவர் பட்ட கஷ்டங்களும் நம்முடைய நல் வாழ்க்கைக்காகத்தான்; நாமும் அன்பு, கருணை, தியாகம் போன்றவற்றை பெற்றிருக்க வேண்டும் என்பதை நமக்கெல்லாம் உணர்த்துவதற்காகத்தான். அதனால்தான் பரந்த இந்த உலகத்தில் ஆயிரம் ஆயிரமாய் ஆலயங்கள் நம் ஐயன் பரமனுக்கு அமைந்திருக்கின்றன.

ஒரு காலத்தில் எழிலார்ந்த ஆலயத்தில் சந்நிதி கொண்டு, தரிசித்த அன்பர்களுக்கெல்லாம் அருள் புரிந்த இறைவனின் பல நூறு ஆலயங்கள் இன்று சிதிலம் அடைந்து காணப்படுவதுடன், ஆலயத்தில் இருந்த தெய்வ மூர்த்தங்கள் எல்லாம் வெட்ட வெளியிலும் பொட்டல் காடுகளிலும் கேட்பாரற்று இருக்கின்றன.  அத்தகைய ஆலயங்களுள் ஒன்றுதான் காஞ்சிபுரம் மாவட்டம் வெண்பாக்கம் கிராமத்தில் அமைந்திருக்கும் அருள்மிகு மச்சேஸ்வரர் ஆலயம்.

கிராமத்துக்குள் நுழையும்போதே நம்மை வரவேற்றது நீர் நிரம்பித் தளும்பிய ஏரிதான். கரையோரங்களில் பல வகையான மரங்கள் அடர்த்தியாக வளர்ந்திருக்க, அவற்றுக்கு நடுவே கரையின்மேல் சற்றுத் தொலைவில் அமைந்திருந்த ஒரு தகரக் கொட்டகையில் நம் ஐயன் மச்சேஸ்வரர் என்ற திருப்பெயருடன் காட்சி தருகிறார். அவருடன் நந்தி தேவரும், சண்டிகேஸ்வரரும் காட்சி தருகின்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்