கலகல கடைசி பக்கம்

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
எது பரிசு? எது தண்டனை?தெனாலி , ஓவியம்: மகேஸ்

செல்ல மகள் சிணுங்கிக் கொண்டிருந்தாள்... “அப்பா! இன்னிக்கு நான் எல்லா வீட்டுப் பாடமும் செஞ்சுட்டுப் போனேன். ஆனா, என் கையெழுத்து கிறுக்கலா இருக்குன்னு டீச்சர் திட்டினாங்க. என் ஃப்ரெண்டு நிறைய பாடங்கள் எழுதவே இல்லே. ஆனாலும், அவளை ‘குட்! கீப் இட் அப்!’னு பாராட்டினாங்க. போப்பா! எங்க டீச்சர் சுத்த மோசம்!” என்றாள்.

“நேரடியா நீ பார்க்கிறதை வெச்சு ஒரு முடிவுக்கு வரக்கூடாதும்மா! நீ இன்னும் நல்லா வரணும்கிற அக்கறையில அவங்க உன்னைத் திட்டியிருக்கலாம். உங்க டீச்சரை நல்லா புரிஞ்சுக்கிட்டா நீ இப்படி வருந்தமாட்டே!” என்று ஆறுதல்படுத்திய அப்பா அவளுக்கு ஒரு குட்டிக் கதை சொன்னார்.

ஒருமுறை, தங்களின் கஷ்டத்தை தீர்க்குமாறு வேண்டிக்கிட்ட இரண்டு பக்தர்களுக்காக, சிவனும் பார்வதியும் வயசான தம்பதி மாதிரி பூமிக்கு வந்தாங்க. முதல்ல ஒரு வீட்டுக் கதவைத் தட்டி, சாப்பிட கொஞ்சம் உணவும், ராத்திரி தங்க இடமும் தரும்படி கேட்டாங்க. ‘நாங்களே கஷ்டத்துல இருக்கோம். இதுல நீங்க வேறயா...’ன்னு எரிச்சலடைந்து சாப்பிடக் கொஞ்சம் பழைய சோறும், படுக்க ஒரு கிழிஞ்ச பாயும் கொடுத்து, திண்ணையில படுக்கச் சொன்னாங்க அவங்க. சிவனார் அந்தச் சோற்றுப் பருக்கைகளைத் தொட்டதுமே அது வெள்ளி நாணயங்களா மாறிடுச்சு. மறுநாள் அதைப் பார்த்ததும்தான், ‘அடடே! நேத்து வந்தவங்க கடவுளா! சரியாக உபசரிக்காம விட்டுட்டோமே!’ன்னு வருத்தப்பட்டு, இனிமே விருந்தாளிகளைக் கனிவோட உபசரிக்கணும்னு முடிவெடுத்தாங்க.

சிவனும் பார்வதியும் இன்னொரு பக்தர் வீட்டுக்குப் போனாங்க. அவங்களோ அன்போடு வரவேற்று, “கொஞ்சம் நொய் இருக்கு. உப்புமா பண்ணித் தரேன். வெளியே குளிரும்! நீங்க உள்ள கட்டில்ல படுத்துக்குங்க. வெளித் திண்ணையில் நாங்க அட்ஜஸ்ட் பண்ணிப் படுத்துப்போம்”னாங்க.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்