பாதை இனிது... பயணமும் இனிது..! - 35

சூது கவ்வும்!சுவாமி ஓங்காராநந்தர், ஓவியம்: அனந்த பத்மநாபன்

ரு நதிக்கரையில் இருவர் நின்றிருந்தனர். நதியின் பிரவாகத்தில் கம்பளி ஒன்று அடித்துச் செல்வதைப் பார்த்தனர். ஒருவர் நீரில் இறங்கி, அதனைக் கைப்பற்ற முனைந்தார். ஆனால், பிரவாகம் அவரையும் அடித்துச் சென்றது. கரையில் நின்றவர், ‘கம்பளி கிடைக்காவிட்டால் பரவாயில்லை; நீ கரையேறு!’ என்றார். ‘நான் அதைப் பற்றிக்கொள்ளவில்லை; அதுதான் என்னைப் பிடித்துக் கொண்டிருக்கிறது. இது கம்பளி அல்ல; கரடி’ என்று கதறினார் நீரில் அடித்துச் செல்லப்பட்டவர்.

வாழ்க்கையில் அலட்சியமாக இருக்கும் தருணங்களில் பலவீனங்களை விளையாட்டாகத் தொடங்கி, பின்பு அதற்கு அடிமையாகிப் பலர் தங்கள் வாழ்க்கையையே அழித்துக் கொள்வதைப் பார்க்கிறோம்.

வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் வளர்ச்சிப் பாதையில் செல்லும் மனிதன், மிகுந்த விழிப்பு உணர் வோடு இருக்கவேண்டும். மனிதனைக் கீழ்நிலைக்குத் தள்ளிவிடக்கூடிய ஆற்றல் படைத்த பல்வேறு விதமான பலவீனங்கள் இருக்கின்றன. கரணம் தப்பினால் மரணம் என்பது போன்றதுதான் வாழ்க்கை.

தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் தங்களை எவ்வாறு செதுக்கிக்கொள்ள வேண்டும் என்பதை திருவள்ளுவப் பெருந்தகையின் பொருட்பால் வழியாக அறிந்து வருகிறோம்.

கொள்ளவேண்டிய குணங்கள், தள்ளவேண்டிய தீமைகள், கவனத்தில் கொள்ளவேண்டிய கூறுகள் எனப் பல்வேறு வகையான கருத்துக்களை திருவள்ளுவர் கூறியுள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்