ஜோதிட சிந்தனைகள் 2-ம் பாகம்

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
முன்னோர்கள் சொன்னார்கள்சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

பிறந்த வேளை கன்னி லக்னம், 7-ம் வீட்டில் மீனத்தில் குரு வீற்றிருக்கிறான். இந்த அமைப்பைப் பெற்ற ஜாதகனின் மனைவி தங்கமாட்டாள். அல்லது தாம்பத்திய சுகத்தில் நிறைவைத் தரமாட்டாள். குடும்ப வாழ்க்கைக்கு உதவுவதில் அவளுடைய பங்கு பயனற்றதாகிவிடும் என்கிறது ஜோதிடம். ‘இந்த லக்னத்துக்கு 7-க்கு உடைய குருவுக்கு எதிரிடையான  செயல்பாடு இருக்கும். கேந்திராதிபத்யதோஷம் ஏற்பட்டதால் தாம்பத்திய சுகத்தை இழக்கவைப்பான்’ என்று விளக்கமளிக்கும்.

1, 4, 7, 10 இந்த வீடுகளுக்கு கேந்திரம் என்று பெயர். அந்தந்த வீட்டின் தலைவனுக்கு கேந்திரத்துக்கு அதிபதி என்ற தகுதி இருக்கும். அதைப் பெற்றவன் இடையூறான விளைவை ஏற்படுத்துகிறான் என்று ஜோதிடம் சொல்லும். குருவுக்கு 4-ம், 7-ம் வீட்டில் அமையும் வேளையில், கன்னி லக்னத்தில் பிறந்தவனுக்கு கேந்திராதிபத்யம் தோஷம் ஏற்பட்டுவிடும். 4-ம் வீடு தனுசு. அதற்கு உடையவன் அதிலேயே இருந்தால் அவனுக்கு கேந்திராதிபத்ய தோஷம் உண்டு. 7-ம் வீடு மீனம். அதற்கு உடையவன் குரு. அங்கும் குருவுக்கு கேந்திராதிபத்ய தோஷம் இருக்கும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்