கேதுவின் அருள்பெற விநாயகரை வணங்குவோம்!

ருவரது குலம் செழித்தோங்கி திகழவேண்டும் எனில், அவருக்கு  கேதுவின் திருவருள் பரிபூரணமாக வேண்டும். கேது நிழல் கிரகம்தான். எனினும், நாம் எதிர்கொள்ள வேண்டிய துயரங்களை எல்லாம் வலுவிழக்கச் செய்து, வளமான வாழ்வை நிஜமாக்குபவர். அவரை, ஞானகாரகன் எனப் போற்றுகிறது ஜோதிடம். 

ஒருவரது ஜாதகத்தில் ஞானகாரகனான கேது பகவான், ஆன்மகாரகனான சூரியனுடன் இணைந்தால், அந்த ஜாதகரின் வாழ்வை பிரகாசமாக விளங்கவைப்பார். அவரே வலுவான குருவுடன் இணைந்து காணப்பட்டால், விழிப்பு உணர்வைப் பெற்றுத் தருவார் என்கின்றன ஜோதிடம் குறித்த ஞானநூல்கள். கேது, காலன், மஹா கேது, ருத்ர பிரியர், தூம்ர கேது, விவர்ணகன்,  நறுமணம் ஏற்பவர், வைக்கோல் புகையின் வண்ணம் கொண்டவர் என்றெல்லாம் கேதுவைச் சிறப்பிக்கும் ஞானநூல்கள், அவரை வழிபடுவதால் சகல பீடைகளும் விலகும்; செல்வம், தான்யம், பசுக்கள் ஆகிய போகங்கள் பெருகும் என்றும் அறிவுறுத்துகின்றன.

அனுதினமும் 'கேம் கேதவேநம:’ என்று சொல்லி கேது பகவானை மனதில் தியானித்து வழிபடுவதன் மூலம், அவரின் திருவருளைப் பரிபூரணமாகப் பெறலாம். அத்துடன் அவருடைய அதி

தேவதையான விநாயகருக்கு அப்பம் படைத்து, அருகம்புல் சாற்றி, கீழ்க்காணும் துதிப்பாடல்களைப் பாடி வழிபடுவதால் விசேஷ பலன்கள் கிடைக்கும்.

வானுலகும் மண்ணுலகும் வாழ மறைவாழப்

பான்மைமிகு செய்யதமிழ்ப் பார்மிசை விளங்க

ஞானமத ஐந்துகர மூன்றுவிழி நால்வாய்

ஆனைமுக னைப்பரவி அஞ்சலிசெய் கிற்பாம்!

(சேக்கிழார் புராணம்)

குருவே! பரமன் கொழுந்தே! பணிந்தேன்

குவலயம் போற்றும் கணநாதா!

வருவாய் நினைவில் வந்தெனை ஆள்வாய்

வடிவேலவனின் சோதரனே!

அருள்வாய் உனையே அனுதினம் பணிவேன்

அன்னைபரா சக்தி அருள் மகனே!

திருமால் மருகா திருவடி சரணம்

தீனரக்ஷகனே கண நாதா!

(ஸ்ரீவிநாயக ஸப்தகம்)

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick