ஆலயம் தேடுவோம்!

மறைந்திருந்து வெளிப்பட்ட மகேஸ்வரனுக்கு ஆலயம் எப்போது?எஸ்.கண்ணன்கோபாலன்

றையாய் மறையின் அரும்பொருளாய்த் திகழும் ஐயன் மகேஸ்வரனின் எண்ணற்ற திருக்கோயில்கள் பொலிவுடன் திகழும் நம்முடைய நாட்டில்தான், மன்னர்களிடையே சதாகாலமும் நிலவிய யுத்தங்களால் நூறு நூறு சிவாலயங்கள் சிதைக்கப்பட்ட அவலமும் நிகழ்ந்தது. இந்த அவலம் மகேஸ்வரனின் ஆலயங்களுக்கு மட்டுமல்ல, மாதவன் கொண்ட கோயில்களுக்கும் நிகழவே செய்தது. எண்ணிக்கை அளவில் பார்த்தால், மகேஸ்வரனின் ஆலயங்களே அதிகம். அப்படி ஓர் ஆலயத்தைதான் நாம் இந்த இதழில் தரிசிக்க இருக்கிறோம்.

சென்னை பூந்தமல்லி-காஞ்சிபுரம் நெடுஞ்சாலையில் சுங்குவார்சத்திரத்தை அடுத்து வரும் பிள்ளைச்சத்திரம் என்ற கிராமத்தில் இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் உள்ளது ஆரியம்பாக்கம் கிராமம். இந்தக் கிராமத்தில்தான் மேற்கூரை இல்லாமல், மூன்று பக்கம் செங்கற்களால் கட்டப்பட்ட சந்நிதியில் நம் ஐயன் பத்மபீட ஆவுடையாரின் மேலாகப் பொலிவுடன் அருட்காட்சி தருகிறார். ஐயனை தரிசித்தபடி நந்திதேவர் காட்சி தருகிறார்.

சுமார் 1300 வருடங்கள் பழைமையான இந்தக் கோயில் பிற்காலப் பல்லவர்கள் காலத்தில் கட்டப்பட்டதாக இருக்கலாமென அங்கிருந்த கல்வெட்டுச் செய்திகளில் இருந்து தெரிய வந்துள்ளது. மிகவும் சிதிலமடைந்த நிலையில் இருந்த இந்தக் கோயிலைக் கண்டு மனம் பதறி நின்றபோது, கொஞ்சம் ஆறுதல் தரும் விதமாக, அந்த ஊரைச் சேர்ந்த நாலு பேர் ஒன்று சேர்ந்து ஐயனுக்குக் கோயில் கட்டும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாக  ஒரு தகவல் நமக்குக் கிடைத்தது. அந்த நால்வருமே 30 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் என்பது மகிழ்ச்சி தந்த ஒரு விஷயம்! அவர்களில் ஒருவரான பாலகணேஷிடம் சிதிலம் அடைந்திருந்த ஆலயத்தைப் பற்றிக் கேட்டோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்