நாரதர் உலா

கோயில்களைக் காப்பாற்றிய யுனெஸ்கோ தீர்மானம்!

நாரதர் இன்னும் வரவில்லையே என்று நாம் நினைத்த உடனேயே நமக்கு முன்னால் பிரசன்னமானார் நாரதர். வரும்போதே செல்போனைப் பார்த்தபடியே வந்தார். ‘‘என்ன நாரதரே! போனில் ஏதும் விசேஷமான செய்தியோ?’’ என்ற கேள்வியுடன் வரவேற்றோம்.

‘‘வாட்ஸ்அப்பில் ஒரு தகவல் வந்தது, அதைத்தான் பார்த்தபடி வந்தேன்’’ என்றார்.

‘‘என்ன தகவலோ?’’

‘‘கோயில்களில் அடிக்கடி புராதன சிலைகள், விக்கிரஹங்கள் திருடு போவதாக செய்தி வருகிறது அல்லவா? அதற்காக இதுவரையில் அலார மணி பொருத்தப்படாத கோயில்களில் புதிதாக அலார மணியைப் பொருத்தவேண்டும் என்று கோயில் சம்பந்தப்பட்டவர்களுக்கு அறநிலையத் துறை உத்தரவு பிறப்பித்து இருக் கிறதாம்.’’
‘‘நல்ல விஷயம்தானே?’’

‘‘நல்ல விஷயம்தான். ஆனால், அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் வராமல் பரம்பரை அறங்காவலர்களால் நிர்வகிக்கப்படும் கோயில்கள் பல இருக்கின்றன. அந்தக் கோயில்களுக்கு நிரந்தரமான வருமானம் இல்லாத நிலையில், அவர்களால் எப்படி கணிசமான பணம் செலவு செய்து அலார மணியைப் பொருத்த முடியும் என்று வாட்ஸ்அப்பில் ஆதங்கப்பட்டு இருக்கிறார் அந்த நண்பர்’’ என்ற நாரதரிடம்,

‘‘அறநிலையத் துறையிடம் விசாரித்தீரா?’’ என்றோம்.

‘‘விசாரிக்காமலா இருப்பேன். சர்வதேச சிலை கடத்தல் கும்பல் நடமாட்டம் தமிழகத்தில் அதிகரித்துள்ளதாம். நம்மூர் விக்கிரஹங்களுக்கு வெளிநாட்டில் ஏக கிராக்கி. விக்கிரஹங்கள் இல்லாவிட்டால் கோயில்களுக்கு என்ன மதிப்பு? அதனால்தான் அலார மணி வைக்கச் சொல்கிறார் களாம். வருமானம் இல்லாவிட்டால், அங்குள்ள விக்கிரஹங்களை அருகில் உள்ள அரசு சிலை பாதுகாப்பு மையத்தில் கொண்டு வந்து வைக்கச்சொல்கிறார்கள். விசேஷ காலங்களில் எடுத்துக் கொண்டுபோய் கோயில்களில் வைத்து வழிபாடு செய்யலாம் என்று யோசனை சொல்லி இருக்கிறார்களாம்’’

‘‘புரிகிறது. அது சரி, போனமுறை வந்தபோது இந்து சமய அறநிலையத் துறையில் தொல்லியல் துறை ஆலோசகராக இருக்கும் ஒருவர் தமிழகத்தில் இருக்கும் சுமார் 300-க்கும் மேற்பட்ட கோயில்களை இடிக்க உத்தரவு போட்டிருப்பதாக வந்த தகவலைச் சொன்னீரே. அதுபற்றி விசாரித்தீரா?’’

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்