நாக முத்திரை

ழைமையான நமது இந்து நாகரிகத்திலும், சிற்பங்களிலும் நாகங்களின் பல்வேறு வடிவங்கள்  பின்னிப்பிணைந்திருக்கும் தோற்றத்தைக் காணலாம். இந்த ஒவ்வொரு தோற்றமும் உயிரின் பல்வேறு சூட்சும நிலைகளையும், சக்தி பாதைகளையும், உயிரின் ரகசியங்களையும் நமக்கு விளக்குகின்றன. நம் உடலில் குண்டலினி சக்தியானது சுருண்டு படுத்திருக்கும் நாகத்தைப் போல் மூலாதாரத்தில் உறங்கிக் கிடக்கிறது. இது யோக சக்தியால் எழுப்பப்பட்டவுடன் மேலெழும்பி அனைத்து ஆதார சக்கரங்களையும் கடந்து சகஸ்ரதளம் வரை சென்று ஆயிரம் இதழ் தாமரையாக மலர்ந்து நம் அறிவை பிரகாசிக்கச் செய்கிறது.

குண்டலினி சக்தியை எழுப்ப அடிப்படையாக யோகக் கனல் என்ற தீ பூதம் உதவும். நாக முத்திரை செய்வதன் மூலம் யோகக் கனலை எழுப்ப முடியும். அடிவயிற்றிலுள்ள நெருப்பைத் தூண்டி, அது உடலெங்கிலும் பரவி சிரசில் சென்று பிரகாசிக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்