அம்மன் அருள் நிறைந்த பச்சை திருநீறு!

ம.சுமன்

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம்- முனுகப்பட்டு கிராமத்தில் அழகுற கோயில் கொண்டிருக்கிறாள் பச்சையம்மன்.  ஆரணியிலிருந்து சுமார் 11 கி.மீ. தூரத்திலும், ஆற்காட்டிலிருந்து சுமார் 33 கி.மீ தூரத்திலும், செய்யாறில் இருந்து சுமார் 20 கி.மீ. தொலைவிலும் உள்ளது இந்தத் தலம்.

பரந்துவிரிந்து பிரமாண்டமாகத் திகழும் ஆலயத்துக்கு அழகு சேர்க்கிறது, பிரமிடு அமைப்பிலான அதன் விமானங்கள். அதுமட்டுமா? சுமார் 600 வருட பழைமை வாய்ந்ததாக ஊரார் போற்றும் இந்தத் திருக்கோயிலில் அம்மன் குடிகொண்ட கதையும் இந்தத் தலத்தின் சிறப்புக்குச் சிறப்பு சேர்க்கிறது!

தீவிர சிவபக்தரான பிருங்கி முனிவர், மறந்தும் பிற தெய்வங்களை வழிபடாதவர். ஒருமுறை, கயிலையில் அம்மையும் அப்பனும் கொலுவீற்றிருந்த தருணத்தில், வண்டு ரூபத்தில் வந்த முனிவர் சிவனாரை மட்டும் வலம் வந்து வழிபட்டுவிட்டுச் சென்றார். இதைக் கண்ட பார்வதிதேவி துணுக்குற்றாள். பிருங்கிக்கு மட்டு மல்ல உலகத்தவர் எவருக்கும் தன்னையும் சிவனாரையும் பிரித்துப் பார்க்கும் எண்ணம் எழக்கூடாது என்று தீர்மானித்தாள். அதற்கு ஒரே வழி சிவனாரின் திருமேனியில் தானும் இடம்பெற வேண்டும் என்று முடிவுசெய்தாள். பூலோகம் சென்று பெரும் தவம் இயற்றி சிவனாரின் திருமேனியில் சரிபாதி இடம்பெற விரும்பி பூமிக்கு வந்து சேர்ந்தாள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்