கேள்வி - பதில்

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
கும்பாபிஷேகம் ஆகாத ஆலயங்களில் வழிபடுவதால் பலன் உண்டா?சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

? இறைபக்தி மிகுந்தவர்கள் வீட்டிலேயே அனுதினமும் வழிபடும்போது, ஆலயத்துக்கும் சென்று வழிபடுவது அவசியமா? இரண்டில் எது சிறப்பு?

- அபிராமி சங்கரன், திருநெல்வேலி-2

எல்லா இடத்திலும் வியாபித்து இருக்கிற கடவுளை, எங்கே வழிபடுவது சிறந்தது என்று எப்படிச் சொல்வது? அப்படிச் சொல்ல ஆரம்பித்தால், ஒவ்வொரு கட்டமாக வளர்ந்து கடைசியில் மனதில் இறைவனை இருத்தி வழிபடுவதே சிறந்தது என்பதில் போய் முடியும். அதுவும் அப்படி வழிபடுவது சிறந்தது என்று அர்த்தமில்லை. அந்த அளவுக்கு நீங்கள் வளர்ந்துவிட்டீர்கள் என்பதுதான் சிறப்பு. மனதுக்குள்ளேயே பகவானை இருத்த முடிகிற சக்தி உங்களுக்கு வந்துவிட்டது என்று அர்த்தம். மற்றபடி அது சிறந்ததா, இது சிறந்ததா என்கிற பட்டிமன்றத்துக்குப் போகாதீர்கள்.

சிறப்பாக இல்லாத ஒன்று, சாஸ்திரத்தில் வராது. சிறப்பு- சிறப்பின்மை, முதலிடம்- இரண்டாவது இடம் இவை எல்லாவற்றையும் சாஸ்திரத்தில் எதிர்பார்க்காதீர்கள். ஏன் கோயில்  வந்ததென்றால், வீட்டில் இருந்தபடியே இறைவனை வழிபடும் பக்குவம் இல்லாதவர்களுக்கும், நேரம்  கிடைக்கவில்லை என்பவர்களுக்கும், வறியவர்களுக்கும் இறைவனை நினைவுபடுத்த கோயில். மற்றபடி வீடு இருக்கிறது. இடம் இருக்கிறது என்றால் வீட்டிலேயே வழிபடலாம். மற்றவர்களைக் கோயிலுக்குப் போக வைக்க முன் உதாரணமாக கோயிலுக்கு சென்று கும்பிட வேண்டும்.கோயிலுக்குப் போய் வந்துவிட்டேன். அதனால் வீட்டில் வேண்டாம் என்பதோ, வீட்டிலேயே கும்பிட்டாச்சு... கோயில் வேண்டாம் என்பதோ சரியாகாது. இரண்டும் தேவை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்