ராசிபலன்

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
ஜுன் 21 - ஜுலை 4‘ஜோதிடரத்னா’ கே.பி.வித்யாதரன்

ழுத்தமான கொள்கைப் பிடிப்பு உள்ளவர்களே!

புதனும் சுக்கிரனும் சாதகமாக இருப்பதால், நினைத்தது நிறைவேறும். பணம் எதிர்பார்த்த வகையில் வரும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். சிலர் புது வாகனம் வாங்குவீர்கள். குருபகவான் 5-ல் தொடர்வதால், வேலை கிடைக்கும். நட்பு வட்டம் விரியும். புது வீடு கட்டத் தொடங்குவீர்கள். கோயில் கும்பாபிஷேகத்துக்கு நன்கொடை வழங்குவீர்கள். சூரியனும் 3-ம் இடத்தில் வலுவாக அமர்ந்திருப்பதால், பிள்ளைகளால் சமூகத்தில் அந்தஸ்து உயரும். அரசாங்க விஷயங்கள் சாதகமாக அமையும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். கடன் பிரச்னைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். சனி 8-ல் அமர்ந்து அஷ்டமத்துச் சனியாகத் தொடர்வதால், யாரையும் நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். முடிந்தவரை விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையுடன் நடந்துகொண்டால் நல்லது.

வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனங்களுடன் புதிய ஒப்பந்தம் செய்வீர்கள். கனிவாகப் பேசி வாடிக்கையாளர்களைக் கவருவீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் உங்களை நம்பி சில முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். கலைத்துறையினரே! உங்களின் நீண்ட நாள் கனவு நனவாகும்.

உதவும் குணத்தால் பாராட்டப்படும் காலம் இது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்