ஊர்வலம்! - கன்னியாகுமரி

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

‘மகிமைமிகுந்த தீர்த்தக்கட்டம்' என்று வால்மீகி ராமாயணமும், வியாச பாரதமும் போற்றும் முக்கடல் சங்கமத்தால் புகழ்பெற்ற திருத்தலம் கன்னியாகுமரி.

இமயப் பொருப்பகத் தீராண் டுறைந்த பின்

குமரித் தீர்த்த மரீஇய வேட்கையின்

தரும யாத்திரையெனத் தக்கிணம் போந் துழி’...

- என இத்தல மகிமையைச் சொல்கிறது ‘பெருங்கதை’.


  குமரிக்குத் தெற்கே இருந்த (கடலில் மூழ்கா திருந்த) நிலப்பரப்பு லெமூரியா கண்டம் அல்லது குமரிக்கண்டம் எனப்பட்டது.        
   
  கன்னியாகுமரிக்கு ‘நாஞ்சில் நாடு’ என்றும் ஒரு பெயர் உண்டு. இப்பகுதியில் வயல்கள் அதிக அளவில் இருந்ததால், நிலத்தை உழ பயன்படும் நாஞ்சில் எனும் கலப்பையைக் குறிக்கும் சொல்லில் இருந்து, இம்மாவட்டத்துக்கு இப்பெயர் அமைந்ததாகக் கூறுவர்.

  முக்கடல் சங்கமிக்கும் குமரிக்கரையில் உள்ள மண் 7 நிறங்களில் காணப்படுவது வியப்புக்கு உரிய விஷயம். மேலும் இங்கு நிகழும் சூரியோதயம் மற்றும் அஸ்தமனக் காட்சிகள் சிறப்பானவை! பெளர்ணமியன்று ஒரே நேரத்தில் சூரிய அஸ்தமனத்தையும், சந்திரோதயத்தையும் காணலாம்.

  முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த ‘பெரிப்ளஸ் ஆஃப் தி எரித்ரியன் ஸீ ’ என்ற கிரேக்கப் புத்தகம், கன்யாகுமரியை முக்கியமான தீர்த்த தலங்களுள் ஒன்றாகக் குறிப்பிடுகிறது.

  ஜாவா தீவிலிருந்து பார்க்க இயலாத துருவ நட்சத்திரத்தை, குமரிமுனையிலிருந்து சுமார் 45 கி.மீ. தூரம் பயணித்து, தான் பார்த்ததாக மார்க்கோபோலோ என்ற வெனிஸ் யாத்ரீகர் தனது பயண நூலில் குறிப்பிட்டுள்ளார்.

  குமரித்துறை முதலில் பாண்டியரின் ஆதிக்கத்தில் இருந்து பின்னர், அது மாறி மாறி சோழர் மற்றும் சேர ஆதிக்கத்துக்கு உட்பட்ட தாயிற்று.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்