மனிதனும் தெய்வமாகலாம்! - 42

பி.என்.பரசுராமன், ஓவியம்: வந்தியன்

மனிதனும் தெய்வமாகலாம்!

கள் - காமம் ; மது - மாது எனும் இரண்டுமே மயக்கத்தைத் தருபவைதாம். ஆனால் இவற்றில், கள்ளைவிடக் கொடியது காமம். காமத்தை நினைத்தாலே போதும் ; பாதிப்புண்டாகும்; காதால் கேட்டாலும் பாதிப்புண்டாகும் ; காமத்தைவிட்டு விலகினாலும் பாதிப்புண்டாகும் ; இப்படிப்பட்ட தீமைகள் காமத்துக்குத்தான் உண்டு. கள்ளுக்குக் கிடையாது. ஆகையால், கள்ளைவிடக் காமம் கொடியது - என எச்சரிக்கிறார் பிரம்மதேவா்.

            உள்ளினும் சுட்டிடும் உணரும் கேள்வியில்
            கொள்ளினும் சுட்டிடும் குறுகி மற்றதைத்
            தள்ளினும் சுட்டிடும் தன்மை ஈதினால்
            கள்ளினும் கொடியது காமத்தீயதே
                                            (கந்தபுராணம்)


பிரம்மதேவரே இப்படிச் சொல்லியிருக்கும்போது, அப்புறம் - கல்யாணம் என்பது எதற்காக? விபத்துண்டாகும் பகுதி என்று அறிவிப்புப் பலகை வைத்த அதே அரசாங்கம், ஒருவழிப் பாதை - இருவழிப் பாதை என்று, வழியில் பயணம் செய்ய வேண்டிய விதி முறைகளைச் சொல்லி வழிப்படுத்துகிறதல்லவா? அது போல... காமத்தின் கொடுமையைச் சொன்ன அதே ஞான நூல்கள், திருமணத்தைச் சொல்லி நம்மை வழிப்படுத்துகின்றன. சேனலைஸ் செய்வது, நெறிப்படுத்துவது என்றெல்லாம் சொல்கிறோமே; அதுபோல! நெறிப்படுத்தப்பட்ட வாழ்வு - இல்லறம். காமத்தில் வசப்பட்டுக் குட்டிச்சுவராகப் போகாமல் இருக்கவே கல்யாணம். ஞானத்தின்மூலமே பரம்பொருளை உணர முடியும்; அடையமுடியும் என்று ஞானகாண்டத்தின் மூலம் சொன்ன அதே வேதம்... இல்லற வழிமுறைகளையும்கூறி நம்மை வழிநடத்தும் கா்மகாண்டத்தையும் சொல்லக் காரணம்?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்