முகம் முதல் நகம் வரை... உங்களை கணிக்கும் - அங்க லட்சணம்

பிருகு முனிவர் அருளிய சாமுத்ரிகா சாஸ்திரம்வித்யாவாரிதி சுப்ரமண்ய சாஸ்திரிகள்

இந்து தர்மத்தின் ஆதாரமாகத் திகழ்பவை வேத-ஆகம சாஸ்திரங்கள். இதில் ஒரு பகுதியாகத் திகழ்வது ஜோதிட சாஸ்திரம். ஆதியில் பரமேஸ்வரனால் பார்வதிதேவிக்கு உபதேசிக்கப்பட்டு, பின்னர் ரிஷி பரம்பரை மூலம் இந்த சாஸ்திரம் உலகுக்கு அருளப்பட்டதாக ஞானநூல்கள் கூறும்.

நாரதர், வசிஷ்டர், அத்ரி, பிருகு, வாமதேவர், ரோமர், மரிசி முதலான  மஹரிஷிகள் மூலம் ஜோதிடம் குறித்த ஞானம் உலகுக்கு அருளப்பட்டது என்பர். இவர்களில் பிருகு முனிவர் அருளியது பிருகு சம்ஹிதை. இது நமது எதிர் காலத்தை தெரிவிக்கும் ஜோதிட சாஸ்திர நூல் எனில், மனிதனின் அவயவங்களின் லட்சணத்தைக் கொண்டு அவனது குணநலன்களை விரிவாக விளக்கும் வகையில் பிருகு முனிவர் அருளிய நூல், சாமுத்ரிகா லட்சண சாஸ்திரம் ஆகும்.

சமுத்திர தேவனாகிய வருண தேவனின் மைந்தர் பிருகு முனிவர். இவர், மனித வள மேன்மையைக் கருதி தன் தந்தையிடம் இருந்து சாமுத்ரிகா லட்சண சாஸ்திரத்தைக் கேட்டறிந்து, உரிய முறையில் இந்த உலகுக்கும் அளித்தார் என்கின்றன புராணங்கள். மனித அங்க லட்சணத்தை விவரிக்கும் மிக அற்புதமான சாஸ்திர நூல் இது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்