சேக்காடு ஈசனுக்கு குடமுழுக்கு!

சென்னை, ஆவடியை அடுத்துள்ள சேக்காடு என்ற ஊரில் ‘பாப்பரமேடு’ என்ற பகுதியில், அமைந்துள்ளது அருள்மிகு சோமநாதீச்சுரர் ஆலயம்; அம்பாளின் திருநாமம் அருள்மிகு வேதநாயகி. இந்தக் கோயில் அமைந்திருக்கும் இடத்தை ‘லிங்கமேடு’ என்று அழைக்கிறார்கள்.

முற்காலத்தில், இப்பகுதியில் வசித்து வந்த ஒரு தம்பதி, குழந்தை இல்லாமல் வேதனை அடைந்திருந்தனர். பின்னர், ஊர்ப் பெரிய வர்கள் அறிவுரையின்படி, அந்தத் தம்பதி இந்த சிவாலயத்தை எழுப்பி வழிபட்டதாகவும், அதன் பலனாக வெகுவிரைவிலேயே அவர்களுக்குக் குழந்தை பாக்கியம் கிடைத்ததாகவும் திருக்கதை சொல்கிறார்கள் ஊர்மக்கள். பெரியபுராணம் அருளிய  சேக்கிழாரும் இக்கோயிலை வந்து வழிபட்டதாக ஒரு தகவல் உண்டு. அதுமட்டுமின்றி, சித்தர்கள் பலரும் போற்றி வழிபடும் சிவபெருமான் இவர் என்று சிலிர்ப்புடன் விவரிக்கிறார்கள் பக்தர்கள். இந்தக் கோயிலின் இடப்புறத்தில் 2000 ஆண்டுகள் பழைமையான விளக்கேற்றும் கல் ஒன்றும் காணப்படுகிறது.

இங்கு வசித்த மக்கள் பலரும் பிழைப்புத் தேடி வெளியூர்களுக்குச் சென்றுவிட்டதால், மிகத் தொன்மையான இந்தக் கோயில் சிதிலம் அடைந்துபோனது. தற்போது ஊர்மக்கள் ஒன்றுகூடி திருப்பணி கள் மேற்கொள்ள, ஆலயம் புதுப்பொலிவு பெற்றுள்ளது திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் மற்றும் சேக்கிழார் ஆகியோரும் இக்கோயிலில் எழுந்தருள இருக்கிறார்கள். மேலும், இங்கு சிவ வழிபாடு செய்து அருள்பெற்ற சேக்காடு சித்தருக்கும் தனிச் சந்நிதி அமையவுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்