சரித்திரம் பேசும்... பிரம்மதேசம்!

மகேந்திரவாடி உமாசங்கரன்

ந்த கால மன்னர்கள் வேதம், சாஸ்திரங் களை நன்கு கற்று அதில் புலமை பெற்றிருந்த அந்தணர்களுக்காக நாடெங்கும் சில சிற்றூர்களை தானமாக வழங்கி அவர்களைக் குடியமர்த்தினார் கள். நீர்வளமும் வயல்வெளிகளும் நிறைந்த இந்த ஊர்கள் பிராமணர்கள் வசிக்கும் இடங்களாக இருந்ததால், பிரம்மதேசம் என்றும், அக்ரஹாரங்கள் என்றும் அழைக்கப்பட்டன. சில ஊர்கள் சதுர்வேதிமங்கலம் என்றும் அழைக்கப்பட்டன.

தமிழ்நாட்டில் பிரம்மதேசம் என்ற பெயரில் பல ஊர்கள் உண்டு. திருவண்ணாமலை, விழுப்புரம், திருநெல்வேலி மாவட்டங் களில் பிரம்மதேசம் என்ற பெயரில் ஊர்கள் உள்ளன. இங்கே நாம் தரிசிக்கப்போவது திருவண்ணாமலை  மாவட்டத்திலுள்ள பிரம்மதேசம். இந்தப் பெயரில் பல ஊர்கள் இருப்பதால், நாம் தரிசிக்கப் போகும் இந்த ஊரை, ‘நாட்டேரி பிரம்மதேசம்’ என்று பக்கத்தில் உள்ள மற்றோர் ஊரின் பெயரையும் சேர்த்துக் குறிப்பிடுவது வழக்கம்.

வாணர்களின் தலைநகரம்

தொண்டைநாட்டின் ஒரு பகுதியை ‘வல்லநாடு’ என்று பெயரிட்டு ‘வாணர்கள்’ என்னும் சிற்றரசர்கள் ஆண்டு வந்தனர். ராணிப்பேட்டைக்கு அருகில் உள்ள தேவாரப் புகழ்பெற்ற ‘திரு வல்லம்’ (தற்போது திருவலம்) எனும் திருத்தலம், வாணர்களின் தலைநகராக விளங்கியது. அதற்கருகே வாணம்பாடி என்ற பெயரில் உள்ள ஓர் ஊரும், சோளங்கிபுரம் எனும் ஊருக்கு அருகில்
உள்ள ‘பானாவரம்’ என்ற ஊரும் வாணர்கள் அரசாட்சியை நினைவுறுத்தும் சாட்சிகளாகத் திகழ்கின்றன. அந்த வாணர்களின் குலத்தில் தோன்றியவனே வந்தியத்தேவன் என்ற வீரன். இவன்  இரண்டாம் பராந்தகன் எனும் சுந்தர சோழனின் மகளும், ராஜராஜ சோழனின் சகோதரியுமான குந்தவியை மணந்தான்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்