உலக அமைதிக்காக ஒரு பயணம்!

எஸ்.ராஜ்மோகன்

ஆறடி உயரம்; அமெரிக்கர்களுக்கே உரிய ரோஜா நிறம்; தோளில் பொன்னிறமாக நீண்டு, கரைபுரண்டோடும் கேசம்; கூர்மையான கண்கள். மென்மையான வார்த்தைகளால் அவர் பேசுவது எல்லாம் இந்து வாழ்வியல் முறைகளின் தத்துவங்கள்! ‘நீங்கள் இந்து மதத்தின் அமெரிக்க முகவரா?’ என்று கேட்டால், ‘‘இந்து என்பது மதம் அல்ல; அது ஒரு வாழ்வியல் முறை. இன்றைய உலகின், மக்கள் கொண்டாடும் மதங்கள் எனப்படும் வாழ்வியல் முறைகளுக்கு எல்லாம் முன்னோடி அது!’’ என்று புன்னகையோடு, அதே நேரம் ஆணித்தரமாகப் பதிலளிக்கிறார் அவர்.

யார் அவர்?

ஸ்டீவன் எஸ்.சேட்லியர். ‘அமெரிக்க குரு’ என்று அமெரிக்கர்களால் கொண்டாடப்படுகிறவர். கடவுளை நோக்கி, இறைவனின் அழைப்பு, பணமும் சக்தியும் என, பன்னிரண்டுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். இவை அமேசான் தளத்தில் விற்பனையில் சக்கைப்போடு போடுகின்றன. தற்போது, ‘குளோபல் என்லைட்மென்ட்’ என்று ஒரு விவரணப்படம் எடுக்கும் முயற்சியில் தமிழகம் வந்தவரை சக்தி விகடனுக்காகச் சந்தித்தோம்.

‘‘எனக்கு மூன்று வயதிலேயே யோகா அறிமுகம் ஆனது. அப்போது, அமெரிக்க சேனல் ஒன்றில் வந்துகொண்டிருந்த யோகா நிகழ்ச்சி ஒன்று என்னை மிகவும் கவர்ந்தது. குரு ஒருவர் பத்மாசனத்தில் அமர்ந்து போதனை செய்த காட்சி என்னை மிகவும் ஈர்த்தது. பெரும்பாலான நேரங்களில் நான் அந்த பாவனையில் அமர்ந்திருப்பேன். அதாவது, கக்கத்தில் கரடி பொம்மையை அணைத்துக் கொண்டு, பத்மாசனத்தில் கண்களை மூடியபடி தியானிக்கும் பாவனையில் அமர்ந்திருப்பேன்.

நான் படிப்பில் சிறந்து விளங்கினாலும், கல்வி அறிவையும் மீறி ஏதோ ஒன்று என்னை ஈர்த்துக்கொண்டே இருந்தது. எனது நகரம் லாஸ் ஏஞ்சலீஸ் அருகே லகுனா பீச். நான் லாஸ் ஏஞ்சலீஸ் நகருக்கு வரும்போதெல்லாம், அங்கு இந்தியா பற்றியும், இறைஞானம் குறித்தும் கிடைக்கும் எண்ணற்ற புத்தகங்களை வாங்கிச் சென்று படிப்பது வழக்கம். நாளாக ஆக, என் மனம் எதையோ தேடியது. நகரின் அருகே இருக்கும் பாலசேட் கிளாசியர் எனப்படும் மலைக்குச் சென்று, அங்கு  தனிமையில் பல மணி நேரம் அமர்ந்திருப்பேன். ஒரு நல்ல குரு கிடைத்தால் மட்டுமே இறைஞானம் பற்றிய முழுமையை அறிந்துகொள்ள முடியும் என்பதை ஒரு கட்டத்தில் உணர்ந்துகொண்டேன். அப்படி ஒரு நல்ல குருவை என் மனம் தேடி அலைந்தது.

ஒருநாள், வழக்கம்போல் அந்த மலையில் அமர்ந்திருந்தபோது, என் மனக்கண்ணில் ஓர்  உருவம் நிழலாடியது. அடர்ந்த தலைக் கேசம், புன்னகை தவழும் முகம், நீண்ட காவி அங்கி என அந்த உருவம் என்னை ஈர்த்தது. மீண்டும் மீண்டும் இந்த உருவம் எனக்குள் தோன்றிக்கொண்டே இருந்தது. 19 வயதில் இந்தியா வர முடிவு செய்து, ரிஷிகேஷ் வந்திறங்கினேன். பின்னர் தென்னிந்தியா வந்தபோது, அந்த உருவம் குறித்து ஒரு தெளிவு கிடைத்தது. என் மனதில் தோன்றிய அந்த  உருவம் வேறு யாருமல்ல; புட்டபர்த்தியின் சாயிபாபா. உடனே அவரைத் தேடிச் சென்று, அவருடன் சில நாட்கள் அப்பியாசம் பயின்றேன். அவர் எனக்கு சாய் என்று பெயரிட்டார்.

என் முதல் யோக குரு மகேஷ் யோகி. அவரிடம் டிரான்சி டென்டல் தியானம் பயின்றேன். பின்னர் சில காலம் மகாவதார் பாபாவின் சீடர், சீக்கிய குருமார்கள், ஜைனத் துறவி என முப்பதுக்கும் மேற்பட்ட குருமார்களிடம் எண்ணற்ற அப்பியாச யோக முறைகளைக் கற்றேன். இவை ஒவ்வொன்றும் ஓர் அனுபவத்தை தந்ததே தவிர, வாழ்வில் நிறைவைத் தரவில்லை.

இடையிடையே பெற்றோரின் வற்புறுத்தலால் படிப்பைத் தொடர்ந்து, பின்பு இங்கிலாந்து சென்று வங்கித்துறையில் பட்டம் பெற்று, அமெரிக்க வங்கிகளில் முதன்மையான பல பொறுப்புகளை வகித்தேன். பணி நேரம் போக கிடைக்கும் அவகாசம் எல்லாம் யோகமும் தியானமும்தான். இருப்பினும், எனக்கான தேடல் முடியவில்லை. ‘இறைவா! என்னைக் கரைசேர்க்க எனக்கான குருவைக் காட்டுவாயாக’ என்று ஓரிரவு முழுவதும் மானசிகமாக மன்றாடினேன்.

மறுநாள், ஒரு வேலை விஷயமாக லாஸ் ஏஞ்சலீஸ் செல்ல வேண்டியிருந்தது. அங்கே வழக்கம்போல் புத்தகங்கள் வாங்கக் கடைக்குச் சென்றபோது, அங்கிருந்த ஒரு போஸ்டர் என்னை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்