ராசிபலன்

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
ஜூலை 5 முதல் 18 வரை‘ஜோதிடரத்னா’ கே.பி.வித்யாதரன்

யற்கையை அதிகம் நேசிப்பவர்களே!

சுக்கிரனும், புதனும் சாதகமான வீடுகளில் செல்வதால், உங்களை யதார்த்தமாகப் பேச வைப்பார். உங்களின் அனுபவ அறிவை வெளிப்படுத்த நல்ல சந்தர்ப்பங்களும் அமையும்.  வீட்டை விரிவுபடுத்தி கட்டுவீர்கள்.  உறவினர், நண்பர்களின் அன்புத் தொல்லை குறையும். குரு உங்களின் குடும்ப வருமானத்தை உயர்த்த உறுதுணையாக இருப்பார்.

16-ம் தேதி முதல் சூரியன் 4-ல் அமர்வதால், பிள்ளைகளின் உயர்கல்வி சேர்க்கை, திருமண விஷயங்களை அலைந்து முடிக்க வேண்டி வரும். ராசிநாதன் செவ்வாய் 8-ல் நிற்கும் சனியுடன் சேர்ந்திருப்பதால், எந்த வேலையைத் தொட்டாலும் இழுபறியாகவே இருக்கிறதே என்று டென்ஷனாவீர்கள். சில நேரங்களில் ரத்த அழுத்தம் அதிகரிக்கும். தலைச்சுற்றல் வரும். சகோதரர்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயம் உண்டாகும். வியாபாரத்தில் லாபம் வரும். வாடிக்கையாளர்களின் கருத்தைக் கேட்டு கடையை இடமாற்றம் செய்வீர்கள். உத்தியோகத்தில் அதிகாரியின் ஆதரவால் செல்வாக்கு கூடும். கலைத்துறையினரே! மூத்த கலைஞர்களிடம் சில நுணுக்கங்களை கற்றுத் தெளிவீர்கள்.

வளைந்து கொடுத்து முன்னேறும் காலம் இது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்