முன்னோர்கள் சொன்னார்கள்

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
ஜோதிட சிந்தனைகள் 2-ம் பாகம்சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

ந்தாம் வீட்டின் அதிபதி 7-ல் அமர்ந்திருக்கிறான். 7-க்கு உடையவன், பாப கிரகத்துடன் இணைந்திருக்கிறான். சுக்கிரன் பலமிழந்து இருக்கிறான். ஆண் ஜாதகத்தில் இப்படியான அமைப்பு இருந்தால், அவனுடைய மனைவி கர்ப்பவதியாகவே உயிர் துறப்பாள் என்கிறது ஜோதிடம்.

ஐந்துக்கு உடையவன் குழந்தைச் செல்வத்தை அளிப்பவன். அவன் 7-ல் அமர்ந்த நிலையில், விபரீத பலனை அளிப்பவனாக மாறுகிறான். ஐந்தை லக்னமாக வைத்தால், 7-பாவம் மூன்றாம் வீடாக மாறிவிடும். மூன்று விபத்தைக் குறிப்பதால், குழந்தையை அளிக்கவேண்டியவன் அழிவுக்குக் காரணமாகிவிடுகிறான். 5-க்கு உடையவனின் குறையானது, குழந்தையை தந்தும் அனுபவத்துக்கு இல்லாமல் செய்துவிட்டது. 7-க்கு உடையவன் பாப கிரகத்துடன் இணைந்திருப்பதால், 7-ஐ அவளது லக்னமாக ஆராயும்போது, லக்னத்துக்கு உடையவன் - ஆயுளைத் தர வேண்டியவன் பாப கிரகத்தின் சேர்க்கையில் விபரீத பலனை ஏற்கவைக்கிறான்.

சுக்கிரன் களத்ரகாரகன். அதாவது களத்ரத்தை-மனைவியை இணைத்து வைப்பதோடு நில்லாமல், அவளிடம் இருந்து மகிழ்ச்சியையும் தரவல்லவன். அவன் பலமிழந்த நிலையில், விபரீத பலனை ஏற்கவைக்கிறான். களத்ரத்தை (மனைவியை) சேர்த்து வைத்து குழந்தை உருவான நிலையிலும், அதை அடைந்து அனுபவிக்க இடமில்லாமல், மனைவியின் (தாயின்) உயிரைப் பறித்து வாழ்க்கையை சூன்யமாக்குகிறான்.

ஐந்துக்கு உடையவன் தவறான இடத்தில் அமர்ந்துவிட (அதாவது 7-ம் வீடு அவனுக்கு மூன்றாம் வீடு), அது விபத்தை ஏற்படுத்தக் காரணமாயிற்று. 7-க்கு உடையவன் பாபியோடு இணைந்து, தனது தகுதியை இழப்பதால், மனைவி இழப்புக்குக் காரணமாகிறான். விவாஹகாரக கிரகமான சுக்கிரன், தனது செயல்பாட்டை நடைமுறைப்படுத்தியும், பலமிழந்த நிலையில் இருப்பதால் களத்திரத்தை இழக்கவைக்கிறான்.

பாவாதிபதி பலம் பொருந்தியிருந்தால் மட்டுமே பாவ பலன் அனுபவத்துக்கு வரும். 7-க்கு உடையவன் பாப கிரகத்தின் இணைப்பின் மூலம் பலம் குன்றியவனாக மாறிவிடுகிறான். சுக்கிரன் விவாஹ காரகனாக இருந்தும் தனது வலிமை இழக்கப் பட்டதால், விபரீத பலனை அளித்துவிடுகிறான். ஐந்துக்கு உடையவன் தவறான இடத்தில் (ஐந்துக்கு 7 மூன்றாவது வீடு)வந்தபடியால் தனது தகுதியை இழந்தான். அதனால்,  குழந்தையை அளித்தும் அதை தக்கவைக்க முடியாமல் செய்ததுடன், அடுத்தக் குழந்தையை ஈன்றெடுக்க இடமளிக்காமல் தாயையும் (மனைவியை) இழக்கச் செய்துவிடுகிறான்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்