ஆட்டத்தை ஆரம்பிச்சாச்சு! - 20

ட்டப் பகலில், பலர் நடமாடும் ரயில்வே ஸ்டேஷன் போன்ற பகுதியில் இளம்பெண் வெட்டிக் கொலை, கொலை நகரமாகிறதா தமிழகத்தின் தலைநகரம்னு நாளேடுகள்ல செய்திகள் படிக்கிறப்போ, நாடு எங்கே போகுதுன்னு கவலையா இருக்கு பிரதர்! ரெண்டு நாள்ல சென்னையில மட்டும் 160-க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது செய்யப்பட்டாங்கன்னு ஒரு நியூஸ் படிச்சேன். அப்பாடான்னு மனசுக்கு அது ஆறுதலைத் தரலை; ‘ஐயோ, சென்னையில மட்டும் இத்தனை ரவுடிகள் சுதந்திரமா இவ்வளவு நாள் சுத்திட்டிருந்திருக்காங்கன்னா தமிழ்நாடு மொத்தத்திலயும் இன்னும் எத்தனை ரவுடிகள் இருப்பாங்க’ன்னு பகீர்னுதான் தோணிச்சு.

ரவுடியிஸத்தை விடுங்க; பொதுவாவே நம்ம சமூகத்துல சகிப்புத் தன்மை குறைஞ்சிட்டு வர்றதுதான் குற்றங்கள் அதிகரிக்கக் காரண மோன்னு தோணுது. எந்த ஒரு ஏமாற்றத்தைத் தாங்கிக்கவும் மனசுல தெம்பு இல்லை. அவங்க பலவீனர்களா இருந்தா தற்கொலை பண்ணிக் கிறாங்க; வீர்யமா, முரட்டுத்தனமா இருந்தா, எதிராளியை அழிக்க நினைக்கிறாங்க; வன்முறையால வீழ்த்த விரும்பறாங்க.

 அப்பத்தான் தான் ஜெயிச்சதா அவங்க மனசு திருப்தி அடையுது. இது சந்தேகமில்லாம காட்டுமிராண்டி மனோபாவம்தான்! நாகரிகமுள்ள மனுஷன் எவனும் சக மனுஷனை அழிக்க நினைக்க மாட்டான்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்