முன்னோர்கள் சொன்னார்கள்

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
ஜோதிட சிந்தனைகள் 2-ம் பாகம்சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

ழாம் பாவத்துக்கு அதிபன், பாவ கிரகத்தின் (அசுப கிரகம் - வெப்ப கிரகம்) பார்வை பட்டிருந்தால் (7-வது பார்வை), அந்த ஜாதகரின் (ஆணானாலும் பெண்ணானாலும்) மனம் விக்ஷேபத்தை அடைந்து (நிலை தடுமாறி), வேறு புருஷன் அல்லது வேறு பெண்ணிடம் ஆர்வம் ஏற்பட்டு, அதன் விளைவாக தனது தரத்தைத் தாழ்த்திக்கொள்வார் என்கிறது ஜோதிடம்.

7-ம் பாவத்தில் அமர்ந்த கிரகத்தைக் குறிப்பிடாமல், அந்த பாவத்துக்கு உடையவனின் தகுதியில் இந்த விபரீதத்தைக் குறிப்பிடுகிறது ஜோதிடம். 7-க்கு உடையவனின் தகுதிதான் தாம்பத்தியத்தின் சிறப்புக்கு முக்கிய காரணமாக மாறுகிறது. அவனுக்கு அசுப கிரகத்தின் பார்வை பட்டால், அதன் தாக்கத்தில் நிலைகுலைந்து மனம் தடுமாறி, சூழலை மறந்து மாற்றுக் கணவனையும் மாற்று மனைவியையும் ஏற்கத் துணிந்து விடும். பண்டைய கலாசாரம் அதை ‘வ்யபிசாரம்’  என்ற பெயரில் அறிமுகம் செய்யும். அது, பெண்மைக்கு மட்டுமல்ல ஆண்மைக்கும் இழுக்குதான். மனமுவந்து ஏற்ற தாம்பத்தியத்தின் பெருமையைத் தக்கவைக்க இயலாமல், இரு குடும்பங்களுக்கு ஊறு விளைவிப்பதையும் மறந்து, விருப்பத்துக்கு இணங்க தவறான பாதையை மனம் ஏற்றுக்கொண்டுவிடும். அற வழியிலான ஆர்வத்தை அழித்து, சுயநல ஆர்வத்தை நிறைவேற்றிக் கொண்டு விடும். இந்த நிலை இரண்டு குடும்பங்களின் சீரழிவுக்கு வித்திடும்.

வ்யபிசாரம் என்ற சம்ஸ்கிருதச் சொல்லுக்கு சட்டதிட்டத்துக்கும், பண்புக்கும் உட்படாமல், விருப்பத்துக்கு அதாவது சுயநலத்துக்கு முன்னுரிமை அளித்து சமுதாய நோக்கில் தரம் தாழ்த்திக் கொள்வது என்ற பொருளும் உண்டு. கணவன் சட்டப்படி தனக்கு வாய்த்த மனைவியையோ அல்லது மனைவியானவள் தனது கணவனையோ அலட்சியப்படுத்தி, சட்டத்துக்குப் புறம்பாக தனது வேட்கையைத் தணித்துக்கொள்வது தகாத செயல். இதையே ‘வ்யபிசாரம்’ என்கிறது ஜோதிடம். பண்பை போதித்து வ்யபிசாரத்திலிருந்து விலக வைப்பதில் தோல்வியுற்ற சமுதாயம், அதை சட்டமாக்கி வெற்றியாக மாற்றிக்கொண்டு விட்டது. வீடு, வாகனம் போன்ற நுகர்பொருள்களை மாற்றுவது போல், தாம்பத்தியத்தைத் தரம் தாழ்த்தி விருப்பப்படி தாம்பத்தியத்தை முறித்துக் கொள்ளவும், இணைத்துக் கொள்ளவும் உரிமை அளித்து விட்டது. தடுமாற்றத்தை சந்தித்த மனம் (விேக்ஷபம்) சட்டத்தை மீறத் துணிந்துவிடுகிறது.

7-க்கு உடையவன் தாம்பத்தியத்தை வரையறுப்பவன். அவன் பாப கிரகத்தின் பார்வையோடு (7-ம் பார்வை) இணைந்த நிலையில், அந்த கிரகத்தின் தாக்கத்தில் மனம் தடுமாறி, திசை திரும்பி சட்டத்தை மீறியாவது வேட்கையைத் தணித்துக் கொள்ளத் துணிவான் என்கிறது ஜோதிடம். 7க்கு உடையவன் ராகு அல்லது கேதுவோடு இணைந்திருந்தாலும், மனத் தடுமாற்றம் ஏற்பட்டு வ்யபிசாரத்தைத் தழுவுவான். 7-க்கு உடையவன் ராகுவுடன் இணைந்தால், அதன் ஏழில் கேது தென்படுவான்; கேதுவோடு இணைந்தால், அதன் ஏழில் ராகு தென்படுவான். சந்திரனின் ‘பாதம்’தான் ராகுவின் குறியீடு. ஆரம்பம் ராகு. அதன் முடிவின் குறியீடு கேது. கணிதப்படி அவை இரண்டு கிரகங்கள் அல்ல; ஒன்றுதான். ‘பாதத்தின்’ ஆரம்பம் தலை- அது ராகு; முடிவு கேது. அதைப் பாம்பாக உருவகப்படுத்தினால் தலை ராகு, வால் கேது என்று சொல்லலாம். நடைமுறையில் தலையை ராகு என்றும் வாலை கேது என்றும் படம் போட்டு வெளிப்படுத்துகிறோம்.

ராகு ஒரு ராசியில் இருந்து அடுத்த ராசிக்கு அடியெடுத்து வைக்கும்போது கேதுவும் தானாகவே வேறு ராசிக்கு நகர்ந்து விடுவான். தலையிருக்க வால் ஆடாது! தலையின் அசைவுக்கு உகந்தபடிதான் வால் ஆடும். இதிலிருந்து அவை இரண்டு இல்லை, ஒன்றுதான் என்பதைப் புரிந்துகொள்ளலாம். இன்றைய புது ஜோதிட பிரபலங்கள் ராகுப் பெயர்ச்சிக்கு பரிகாரம் சொல்ல முற்படும் வேளையில், கேதுப் பெயர்ச்சியையும் இணைத்துக் கொள்கிறார்கள். பாம்பு தலை மனித உடம்பு, மனிதத் தலை பாம்பின் உடம்பு இப்படி இரண்டு வகையான உடலமைப்பை ஏற்படுத்தி விளக்கும் பிரபலங்கள், அதற்கான சான்றினை தருவது இல்லை. ஏனெனில், அவர்களது விளக்கம்தான் சான்று!

ஜோதிடத்தில் (கணிதம்) அதற்குச் சான்று கிடையாது. ராகு-கேதுக்களை சாயா கிரகங்கள் (நிழல் கிரகங்கள்) என்று, மற்ற கிரகங்களைவிட வேறுபடுத்திக் கூறும் ஜோதிடம் (கணிதம்). 12 வீடுகளில் (ராசிகளில்) அவர்கள் இருவருக்கும் இடம் இல்லை. அதை வைத்து வரும் தகுதியும் இல்லை என்று பலன் சொல்லும் பிரபலங்களும் விளக்குவார்கள். இப்படி மாறுபட்ட சிந்தனையில் பலன் சொல்லும் பிரபலங்கள் இன்றைக்கு பெருகிவிட்டார்கள். முறையாக ஜோதிடத்தையும், பலம் சொல்லும் பகுதியையும் கற்றுத் திறமையை வளர்த்துக் கொள்ள இயலாமல், செவி வழித் தகவல்கள் மற்றும் தங்களின் சொந்த அனுபவங்களை வைத்து பலன் சொல்ல முற்படும் பிரபலங்களும் தென்படுகிறார்கள். அவர்களது முடிவு பல பக்கவிளைவுகளை உண்டு பண்ணி விடுகிறது. அது அப்பாவி மக்களை பாதிப்பது அவர்களது துரதிர்ஷ்டம்.

10-ம் வீட்டுக்கு உடையவன், இரண்டுக்கு அதிபதி, 7-க்கு உடையவன் ஆகிய மூவரும் சேர்ந்து பத்தாம் வீட்டில் இருந்தால், அவளுக்கு கணவனைத் தவிர மாற்றான் ஒருவரது தொடர்பு இருக்கும் என்கிறது ஜோதிடம். 2-குடும்பத்தைக் குறிக்கும், 7-மனைவி, 10- கர்ம வினையின் செயல்பாடு.

10-க்கு உடையவனுடன் இந்த இருவரது (2, 7) இணைப்பு மாற்றானின் தொடர்பில் குழந்தையை ஈன்றெடுக்கும் அளவு நெருக்கத்தை ஏற்படுத்துகிறது என்று சொல்லும் ஜோதிடம் இரண்டின் அதிபதி, ஏழாம் வீட்டின் அதிபதிக்கு ஆறுக்கு உடையவனாக மாறிவிடுகிறான். 7-ன் அதிபதி இரண்டாம் வீட்டின் அதிபதிக்கு எட்டுக்கு உடையவனாக மாறிவிடுகிறான். அதற்குக் காரணம் ‘2-ன் 7’ ஆறாம் வீடு, ‘7-ன் 2’ எட்டாம் வீடு. இவர்கள் ஒன்றுக்கொன்று பகையாக 10-ம் வீட்டில் சேரும்போது விபரீத பலனை ஏற்படுத்திவிடுகிறார்கள். 10-க்கு  இரண்டாம் வீடு 4 (அதாவது கேந்திரம்). 2-க்கு பத்தாம் வீடு 9 (த்ரிகோணம்). அவர்கள் இருவரும் நெருங்கிய தொடர்பில் கர்மவினையை செயல்படுத்தும் தகுதியைப் பெறுகிறார்கள். ஆனால் 2-ம், 7-ம் பகைவர்களாக மாறியதால், கர்ம வினையின் தரம் விபரீத வினைக்குக் காரணமாக மாறிவிடுகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்