கலகல கடைசி பக்கம்

நேயாவின் தோழன்!யுவா, ஓவியம்: மகேஸ்

குடும்ப அரசியல் என்று பேசியவர்கள் எல்லாம் இன்று ஜெ. பதவி ஏற்பில் முதல் வரிசையில் உட்கார்ந்த சசிகலா குடும்பத்தை பார்க்காமல் புளியங்கொட்டையை உலுக்கி கொண்டு இருந்தார்கள் போலும்...நேயாவுக்குத் தூக்கமே வரவில்லை. கட்டிலில் இருந்து எழுந்து அமர்ந்தாள். ‘பாவம் ட்விட், நான் செஞ்ச தப்புக்குத் திட்டு வாங்கிட்டான்!’

எட்டாம் வகுப்பு படிக்கும் நேயாவின் செல்ல நாய்க்குட்டிதான் ட்விட். பொமரேனியன். ஸ்கூல் நேரம், படிக்கும் நேரம் போக, மீதி நேரமெல்லாம் அவளுக்கு அதனோடுதான் பொழுது கழியும். அவளுக்குச் சரியாக அதுவும், அதற்குச் சரியாக அவளும் ஓடியாடி, துள்ளிக் குதித்து விளையாடுவார்கள். வீட்டில் யாராவது நேயாவைக் கோபித்துக்கொண்டால், ட்விட்டும் அவர்களிடம் ‘டூ’ விட்டு, முகத்தைத் தூக்கிவைத்துக்கொள்ளும். அந்த அளவுக்கு இரண்டு பேரும் நெருக்கம்.

இன்று காலையில், அழகான ஒரு ஃப்ளவர் வாஷ் வாங்கி வந்தார் அப்பா. வேலைப்பாடுமிக்க கண்ணாடி ஜாடி அது. “எங்க மேனேஜருக்கு பர்த்டே! அவருக்கு கிஃப்டா கொடுக்கணும். இங்கேயே இருக்கட்டும். குளிச்சுட்டு வந்து பேக் பண்றேன்” என ஹாலில் இருந்த மேஜை மீது வைத்துவிட்டுப் போனார்.

ட்விட்டோடு விளையாடிக்கொண்டிருந்த நேயா, மேஜை மீது இருந்த ஒரு துணியை வேகமாக இழுக்க, துணியின் நுனியில் பதிந்திருந்த ஃப்ளவர் வாஷ் சட்டென்று நழுவி, உருண்டு, கீழே விழுந்து உடைந்தது. ‘ஐயோ! அப்பா வந்தால் திட்டுவாரே!’ என்று பதறிப்போனாள் நேயா.

சில நொடிகள் திகைத்தவள், துணியைக் கீழே போட்டுவிட்டு, கிச்சன் அருகில் ஓடி, “அம்மா..! ட்விட் துணியைப் பிடிச்சு இழுத்தானா... ஃப்ளவர் வாஷ் கீழே விழுந்து உடைஞ்சுடுச்சு!” என்று கத்தினாள்.
அம்மா அவசரமாக கைத்துணியில் கைகளைத் துடைத்துக்கொண்டு ஹாலுக்கு வந்தாள். ஈர டவலோடு அப்பாவும் பாத்ரூமிலிருந்து வெளியே வந்தார். உடைந்த கண்ணாடி ஜாடி அருகே நின்றவாறு மூன்று பேரையும் பரிதாபமாக மாறி மாறிப் பார்த்தது ட்விட்.

அப்பா கோபத்துடன் ட்விட்டைப் பிடித்துத் தரதரவென இழுத்துப் போனார். ஹாலைத் தாண்டி வெளியே நடையில், மாடிப்படி வளைவின் கீழே நிறுத்தினார். “இனிமே இதுதான் உன் இடம். புரியுதா? இந்த இடத்தைவிட்டு உள்ளே வந்தே... தொலைச்சுப்புடுவேன்!” என்று சீறினார். “இனிமே இதுக்குச் சோறு, தண்ணி எது வைக்கிறதானாலும் அங்கேயே வைங்க!” என்று சொல்லிவிட்டு, அறைக்குள் போனார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்